உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா வழக்கில் ஈ.டி., என்ட்ரி : வெளிநாட்டு பணம் பற்றி விசாரணை

தர்மஸ்தலா வழக்கில் ஈ.டி., என்ட்ரி : வெளிநாட்டு பணம் பற்றி விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : தர்மஸ்தலா வழக்கில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் களத்தில் குதித்துள்ளது. தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரணையை துவக்கி உள்ளது.கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த, மஞ்சுநாதா கோவில் முன்னாள் ஊழியர் சின்னையா கைது செய்யப்பட்டார்.இதற்கிடையில், பெங்களூரில் வசிக்கும் பல்லாரியை சேர்ந்த, 'யு - டியூபர்' சமீர் தன் யு - டியூப் பக்கத்தில், தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில் பெண்கள் உடல்கள் கிடப்பது போன்று, ஏ.ஐ., தொழில்நுட்ப புகைப்படத்தை வெளியிட்டார். எஸ்.டி.பி.ஐ., அமைப்பும், தர்மஸ்தலா வழக்கில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தியது. அமித் ஷாவுக்கு கடிதம் நேத்ராவதி ஆற்றங்கரையில், 17 இடங்களில் தோண்டியும் எலும்பு கூடுகள் எதுவும் கிடைக்காத நிலையில், தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பப்படுவதாக பா.ஜ., பொங்கி எழுந்தது. உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, 'தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவோருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது பற்றி, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினார்.வங்கிகளுக்கு பணம்இதையடுத்து, தர்மஸ்தலா வழக்கில் அமலாக்கத் துறையும் களத்தில் குதித்தது. மைசூரின் ஒடநாடி, சம்வாட் ஆகிய இரு தொண்டு நிறுவனங்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த பணம், அந்த பணம் என்ன காரணத்திற்காக வந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கும்படி சில வங்கிகளுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது.இந்த தொண்டு நிறுவனங்கள் மூலம், தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், தொண்டு நிறுவனங்களின் பண பரிவர்த்தனை விபரங்களை வங்கிகளிடம் கேட்டுள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்தால், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 11:57

தமிழக எம்பி இதனால் தானோ உண்ணாவிரதத்தை கைவிட்டு விட்டாரோ. வெளி நாடு தப்பிக்க முயற்சி செய்யலாம். திராவிட மாடல் அதற்கு உதவலாம். எதற்கும் என் ஜ ஏ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


Rajan A
செப் 03, 2025 05:15

பணம் வினியோகம்? தமிழ் வாழ்க


Ramesh Sargam
செப் 03, 2025 00:31

சின்னையா போன்ற தேசதுரோகிகள், ஹிந்து துரோகிகள், பிணம் தின்னிகள் மற்றும் அவனை ஆட்டிப்படைக்கும் அந்த அமைதி மார்க்கத்தினர்கள் இவர்கள் எல்லோரும் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். நீதிமன்றங்களுக்கு ஒரே ஒரு பணிவான வேண்டுகோள்: தயவுசெய்து ஜாமீன் ஜாமீன் கொடுத்து வழக்கை தள்ளிப்போட்டு, அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றாதீர்கள். உங்களுக்கு புண்ணியமாப்போகும்.


Tamilan
செப் 02, 2025 23:42

நாட்டில் வெளிநாட்டு பணம் இல்லாத இடம் எது . மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் வெளிநாட்டு பணத்தை வைத்துதான் நாட்டு மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள் . நாட்டை விற்றுப்பெற்ற பணம் பங்குசந்தையில் நாட்டுமக்களிடம் கொள்ளையடித்து உலகளாவிய கருப்புபணகளை வெள்ளையாக்கிய பணம் என அனைத்தும் அன்றாடம் நடக்கும் ஒன்றுதான். ED கற்காலத்தில் உள்ளதா ?


Rajan A
செப் 03, 2025 05:16

₹200


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 03, 2025 11:59

வெளிநாட்டு பணம் எவ்வளவு கிடைத்தது.


ரங்ஸ்
செப் 02, 2025 23:02

அப்பிடி போடு அறிவாளை. ஏஐ தொழில் நுட்பம் முலம் போலி வீடியோ செய்து அநியாயமாக நல்லவர்களை நோகச் செய்தாயடா. பாரடா, தெய்வம் நின்று கொல்லும். இ.டி விசாரித்து உண்மை வெளி வந்து, தேச துரோகிகள் மாட்டுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை