உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது.ஆம்ஆத்மியின் எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் டில்லி வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தபோது சட்டவிரோத ஆட்சேர்ப்பு மற்றும் நிதி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இன்று(செப்.,01) அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, அமானதுல்லா கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=59zy1aar&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பயப்பட மாட்டோம்!

முன்னதாக, சமூகவலைதளத்தில், ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: ஆம்ஆத்மி அதிகாரத்திடம் குனியவோ, பயப்படவோ போவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போலி வழக்குகளை பதிவு செய்து அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை தனக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் சில பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இப்போது தேடல் வாரண்ட் என்ற பெயரில் என்னை கைது செய்ய அமலாக்கத்துறை எனது வீட்டிற்கு வந்துள்ளது.

சிறைக்கு அனுப்ப சதி

என் மாமியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் என்னை கைது செய்து எங்கள் வேலையை நிறுத்த வேண்டும் நினைக்கிறார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் இந்த முறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அமானதுல்லா கான் கூறியுள்ளார்.

போக்கிரித்தனம்

இது தொடர்பாக, பதிலளிக்கும் வகையில், கட்சியின் மூத்த தலைவரும்,எம்.யு.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது: 'அமானதுல்லா கானுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பா.ஜ.,வின் சர்வாதிகாரம் மற்றும் அமலாக்கத்துறையின் போக்கிரித்தனம் இரண்டும் தொடர்கின்றன' என குற்றம்சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mohamed Ibrahim
செப் 02, 2024 16:18

தனிநாடு யாரும் விருப்பப்பட்டு கேட்கவில்லை... தனி நாட்டிற்கு போக வாய்ப்பு இருந்தும் இந்திய மண்ணை தேர்வு செய்த பெருமைக்குரிய வர்கள் தான் இந்திய முஸ்லீம்கள்


Lion Drsekar
செப் 02, 2024 13:26

எந்த குறையும் செயலாற்ற அனுமதி இல்லை படியே அனுமதி பெற்றாலும் முடிவு விடுதலை, மீண்டும் ஹிர்தல் பதவி, சம்பளம், பென்சன் எதற்கு மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணாக்குகிறார்களோ தெரியவில்லை, வந்தே மாதரம்


Indhuindian
செப் 02, 2024 12:34

இப்பதான் செய்தி வந்தது இவரை உள்ளே போட்டுட்டாங்களாம். கணக்கு சரியா போச்சு ஒண்ணெய் வெளியிலே விட்டாங்க அதுக்கு பதிலா ஒருத்தரை உள்ளே போட்டுட்டாங்க வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்


K Subramanian
செப் 02, 2024 11:40

இந்த ஆளு ஒரு தேச துரோகி. ஹிந்துக்களுக்கு எதிராக நிறைய செய்திருக்கிறான். பிடிச்சு உள்ள போடுங்க


ஆரூர் ரங்
செப் 02, 2024 11:39

தனிநாடு கேட்டு பிரிந்து சென்ற அவர்களுக்கு இங்கும் வக்ஃபு வாரியம், சிறுபான்மை அந்தஸ்து எதற்கு? மீண்டும் பிரிவினை கேட்கவா?


Duruvesan
செப் 02, 2024 11:10

ஹிந்து விரோதி இவன், இப்போ ராவுள் பொங்குவார்


nv
செப் 02, 2024 10:35

இவர் தான் டெல்லி வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட இந்து மத எதிர்ப்பாளர். இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!!


enkeyem
செப் 02, 2024 10:35

ஊழல் செய்து சொத்து சேர்க்கும் போதும் மைனாரிட்டி என்கிற போர்வையில் முறைகேடுகள் செய்யும் போதும் இருக்கிற துணிச்சல் அமலாக்கத்துறையிடம் விசாரணையை சந்திக்க வேண்டும் என்றால் மட்டும் பம்முவது ஏன்? உன்னிடம் தவறு இல்லையென்றால் துணிச்சலாக விசாரணையை எதிர்கொண்டு நீ குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டியதுதானே


Nandakumar Naidu.
செப் 02, 2024 10:03

அமானதுல்லா கான் ஒரு தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதி. டெல்லி ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரித்து வன்முறையாளர்களுக்கு உதவி செய்தவன். பிஜேபி யைத்தவிற ஹிந்துக்களுக்கான கட்சி இந்தியாவில் எதுவுமில்லை. எனவே ஹிந்துக்கள்.இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.


ديفيد رافائيل
செப் 02, 2024 10:03

தப்பு பண்ணா arrest பண்ண தான் செய்வாங்க. பணம் கொள்ளையடித்து தன்னை தற்காத்து கொள்வதற்காகவே அரசியல் கட்சியில் அடைக்கலம் ஆகுறானுங்க.


முக்கிய வீடியோ