உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்; 8 மணி நேரமாக எண்ணும் பணி!

அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம்; 8 மணி நேரமாக எண்ணும் பணி!

பாட்னா: பீஹார் அமலாக்கத்துறை சோதனையில் ரூ.11.64 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 இயந்திரங்களைப் பயன்படுத்தி 8 மணி நேரம் இடைவிடாமல் அதிகாரிகள் எண்ணும் பணி மேற்கொண்டனர். பீஹார் மாநிலத்தில் கட்டட கட்டுமானத் துறையின் தலைமைப் பொறியாளர் தாரிணி தாஸின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.11.64 கோடி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஒரு நாளுக்குப் பிறகு தாரிணி தாஸை பீஹார் அரசு பணிநீக்கம் செய்தது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சீவ் ஹான்ஸுடன் தொடர்புடைய பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பீஹார் எரிசக்தித் துறையின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான ஹான்ஸ் மீதான வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் ஊழல் அம்பலம் ஆனது. சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை நடத்தினர். தாஸின் பங்களாவுக்குள் நுழைந்ததும், பல அறைகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பறிமுதல் செய்த பணத்தை, 4 இயந்திரங்களைப் பயன்படுத்தி 8 மணி நேரம் இடைவிடாமல் அதிகாரிகள் எண்ணும் பணி மேற்கொண்டனர். ஓய்வுக்குப் பிறகு பணி நீட்டிப்பில் இருந்த தாஸ், தற்போது துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kannapiran Arjunan
ஏப் 03, 2025 02:02

அடுத்து பிஜேபி க்கு கணிசமான பரிசளிப்பு கொடுத்தால் ஊழல் அல்ல என்றும் பிஜேபி ED விங் கூறி தப்பிக்க முடியும்


M R Radha
ஏப் 01, 2025 17:35

இருநூறு ரூவா கிராக்கியான நீயா இப்படி சொல்வது.காலைல ஏன்சோமா மூச்சொலி படிச்சோமா, பிரீ குவட்டர் அடிச்சோமா, 200 வாங்கி ஜோபில போட்டுக்குனோமானு இரு.


Dhayasankar Subramanian
ஏப் 01, 2025 08:32

அமித்ஷா வின் மகன் ஜாய் ஷா அடித்த, அடித்து கொண்டு இருக்கும் லஞ்சம் பணத்தை விடவா


Mediagoons
மார் 31, 2025 20:02

ஊழல் மலிந்தது இந்துமதவாத சந்தர்ப்பவாத கூட்டணி அரசு


Jagan (Proud Sangi)
மார் 31, 2025 19:18

திமுக அடிச்சதை எண்ண முடியாது. எவ்ளோ டன் எடை என்று பார்த்து தான் முடிவு செய்யவேண்டும். எண்ணினால் ஆபிஸருங்க ரிட்டையர் ஆகும் வரை எண்ணிக்கொண்டே தான் இருக்க வேண்டும்


Mayakannan Alagarsamy
ஏப் 01, 2025 23:04

அதனால் தான் என்னாமலேவாங்கிட்டு போயிருவாங்க போல்....


Sampath Kumar
மார் 31, 2025 17:08

மைண்ட் வாய்ஸ் எல்லாம் தீ முக திராவிட மாடலை விஞ்சிட்டானுக போல வாயை திறந்தாள் வாயிலேயே வெட்டவனுக போல


Arun Timber
மார் 31, 2025 15:30

இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும்உள்ள இந்த துறை அதிகாரிகள், துறை மந்திரிகள் கூட்டணியாக 20% கமிஷன் வாங்குவது பற்றி நாம் தெரிந்து வைத்து இருக்கிறோம் நாம் குறட்டை விட்டு தூங்குவது மட்டுமே வுண்மை


sankaranarayanan
மார் 31, 2025 12:58

தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள் பங்களாவிலும் திடிர் சோதனை போட்டால் கட்டு கட்டாக இல்லை இல்லை சாக்கு அல்லது கோனியாக கோனியாக பண மூட்டைகள் கிடக்கும் என்பது உறுதி உறுதி உறுதி அவைகள் திராவிட மாடல் அரசை நடத்துவதற்கு ஓராண்டிற்கு தேவையானதாகும்


Ramesh Sargam
மார் 31, 2025 12:44

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் சோதனையிட்டால் இதைவிட அதிக பணம் கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை