மேலும் செய்திகள்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் உதயமானது
01-Dec-2024
பெங்களூரு: பாதுகாப்பு இல்லாத தனியார் பள்ளிகளின் உரிமத்தை, கல்வித்துறை அதிகாரிகள் புதுப்பித்து குளறுபடி செய்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுவாக தனியார் பள்ளிகளுக்கு உரிமம் அளிக்கும் போதும், உரிமத்தை புதுப்பிக்கும் போதும் பள்ளி கட்டடம் மாணவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளதா, தீ விபத்தை தடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதா, கல்வி நோக்கத்துக்காக நில பரிமாற்றம் சான்றிதழ் உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்.அதன்பின் பள்ளிகளுக்கு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் சில மாவட்டங்களின் கல்வித்துறை துணை இயக்குனர்கள், தகுதி இல்லாத பள்ளிகளுக்கு 5 ஆண்டு, 10 ஆண்டு காலம் உரிமத்தை புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.சட்டவிரோத பள்ளிகளுக்கு கடிவாளம் போட, மாநில அரசு கடுமையான விதிமுறைகளை செயல்படுத்துகிறது. கல்வித்துறை அதிகாரிகளே இந்த விதிமுறைகளை அலட்சியப்படுத்தி, தகுதியற்ற தனியார் பள்ளிகளுக்கு அரணாக நிற்கின்றனர்.பள்ளிகளுக்கு உரிமம் வழங்கும் விஷயத்தில், அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொள்கின்றனர். அரசு உடனடியாக, உரிமம் புதுப்பிக்கப்பட்ட பள்ளிகளின் ஆவணங்களை பற்றி, விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தனியார் பள்ளி சங்கங்கள் மற்றும் பெற்றோர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர் சசிகுமார் கூறியதாவது:உரிமம் வழங்குவதில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர் என நான் ஆரம்பத்தில் இருந்தே, கூறி வருகிறேன். இவர்களின் ஊழல் இப்போதும் நிற்கவில்லை. இந்த விஷயத்தில் பள்ளிகளை மட்டும் பொறுப்பாளி ஆக்க கூடாது. அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.நாங்களும் இணையதளத்தில் ஆய்வு செய்தோம். பல குளறுபடிகள் நடந்துள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கும், அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இது குறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும்.சில பள்ளிகள் ஆவணங்களை, இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளன. இவை சரியாக உள்ளன என, அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த பள்ளிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய முற்பட்டால், முடிவதில்லை. இது தொழில்நுட்ப பிரச்னையா அல்லது தனியார் பள்ளிகளை பாதுகாக்க, அதிகாரிகளின் தந்திரமா என்பதற்கு, கல்வித்துறையே பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
01-Dec-2024