வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்தக் குழுவால் எந்த பலனும் உண்டா
உருப்படியா ஏதாவது ஒரு முடிவை எடுங்க
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் இடையே கலந்துரையாடலை மேம்படுத்தும் வகையில் அட்டவணை தயாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும் சி.பி.எஸ்.இ., அமைப்பின் கீழ் ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பல இடங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதேபோல், பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பாக பெற்றோர்கள் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர். இதனால் இரு தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக பெற்றோர்களுக்கு என பிரத்யேகமாக அட்டவணை தயாரிக்க சி.பி.எஸ்.இ., குழு ஒன்றை அமைத்து உள்ளது.இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆக டில்லி சர்தார் படேல் வித்யாலயா பள்ளி முதல்வர் அனுராதா ஜோஷி நியமிக்கப்பட்டு உள்ளார்.மேலும், மும்பை போதர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சுவாதி போபத் வாட்ஸ்டில்லி வசந்த் வேலி பள்ளி முதல்வர் ரேகா கிருஷ்ணன்,பெங்களூரு வடக்கில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி முதல்வர் மஞ்சு ஆரிப்ஆமதாபாத் டிஏவி சர்வதேச பள்ளி முதல்வர் நிவேதிதா கங்கூலிடில்லி பிர்லா வித்யா நிகேதன் முதல்வர் மினாக்சி குஷ்வாகாடில்லி சான்ஸ்கிரீட் பள்ளி முதல்வர் ரிச்சா அக்னிஹோத்ரிடில்லி செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் ஆனி கோஷிஅம்பாலா ராணுவ பப்ளிக் பள்ளி முதல்வர் பரம்ஜித் சிங்அசாம், கவுகாத்தியின் சரளா பிர்லா கியான் ஜோதி முதல்வர் திகாந்தா ஹால்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.குழுவின் நோக்கம்*பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை அட்டவணை தயாரித்தல்*பெற்றோர் ஆசிரியர் இடையிலான வலுவான கலந்துரையாடல் ஏற்படுத்துதல்*விடலை பருவ மாணவர்கள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகள், இளவயது மற்றும் நடுத்தர வயது மாணவர்கள் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும்*தேர்வு முடிவுகள், நடத்தை மாற்றங்கள் தொடர்பான இடைவிடாத தகவல் தொடர்பு ஏற்படுத்துதல்*திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலம் தகுந்த நேரத்தில் உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தலே இக்குழுவின் நோக்கம் ஆகும்.இக்குழுவினர் *சி.பி.எஸ்.இ., வாரியம் ஏற்பாடு செய்த அட்டவணைப்படி ஆன்லைன் வாயிலாக கூடி ஆலோசனை நடத்த வேண்டும்.*நடவடிக்கை எடுக்கவும், முடிவு எடுக்கவும் ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து செயல்படுதல்*குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை சரி செய்யும் வகையில் அட்டவணையை தயாரித்தல் ஆகியன இதன் நோக்கம்.*இக்குழுவினர் தங்களது அறிக்கையை அளிக்க மார்ச் 15 ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்தக் குழுவால் எந்த பலனும் உண்டா
உருப்படியா ஏதாவது ஒரு முடிவை எடுங்க