உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆவணங்களை பகிர்ந்தால் ஆபத்து வரும்; பல கோடி ரூபாய் வரி பாக்கி நோட்டீஸ் வந்ததால் அப்பாவிகள் அதிர்ச்சி!

ஆவணங்களை பகிர்ந்தால் ஆபத்து வரும்; பல கோடி ரூபாய் வரி பாக்கி நோட்டீஸ் வந்ததால் அப்பாவிகள் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தினமும் முட்டை மற்றும் ஜூஸ் விற்பனை செய்பவர்களுக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி உள்ளது. அதனை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,யின் தாமோ மாவட்டம் பதராரியா நகரைச் சேர்ந்தவர் பிரின்ஸ் சுமன். முட்டை வியாபாரி.

நோட்டீஸ்

இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசில் , ' கடந்த 2022ம் ஆண்டு ' பிரின்ஸ் எண்டர் பிரைசஸ்' என்ற நிறுவனம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி . தோல், இரும்பு மற்றும் மரம் தொடர்பான தொழிலில் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகளவு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. அரசுக்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி பாக்கி செலுத்த வேண்டி உள்ளது அதனை செலுத்த வேண்டும்', எனக் கூறப்பட்டு இருந்தது.

வறுமை

ஆனால், பிரின்ஸ் சுமன் கூறியதாவது: நான் தள்ளுவண்டியில் சென்று முட்டை விற்று வருகிறேன். நான் டில்லி சென்றது கிடையாது. அங்கு எந்த தொழிலையும் துவக்கியது இல்லை. தனக்கும் இந்த தொழிலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனது சம்பளத்தை மட்டும் நம்பியே தனது குடும்பம் உள்ளது எனக்கூறியுள்ளார்.சிறு மளிகைக் கடை நடத்தும் இவரது தந்தை கூறுகையில், எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், தினசரி செலவுக்கு கூட நாங்கள் ஏன் கஷ்டப்படவேண்டி உள்ளது என்றார்.

புகார்

இவரது குடும்ப வழக்கறிஞர் கூறுகையில், பிரின்ஸ் சுமனின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளோம் என்றார்.

ஜூஸ் வியாபாரி

இதே போன்று உ.பி., யின் அலிகாரில் ஜூஸ் விற்பனை செய்துவரும் ரஹீஸ் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ரூ.7.5 கோடி மேல் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2020- 21 ல் அவரது பெயரில் கோடிக்கணக்கான போலி பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், இதனால், ரூ.7,79,02,457 ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.இது தொடர்பாக ரஹீஸ் கூறுகையில் , ' நான் ஜூஸ் மட்டும் விற்கிறேன்.இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. அரசு எனக்கு உதவுமாறு கேட்கிறேன். நான் ஒரு ஏழை. பொய் வழக்கில் சிக்க வைக்கக்கூடாது. நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் எனது தனிப்பட்ட ஆவணங்களை வேறு யாரிடமாவது பகிர்ந்து கொண்டீர்களா என கேட்டார்கள். நான் அவற்றை யாருடனும் பகிரவில்லை என பதிலளித்தேன் என்றார்.இவரது ஆவணங்களை பயன்படுத்தி சிலர், கடந்த 2022ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது நன்கொடை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. ரஹீஸ் நண்பர் கூறுகையில், ' ரஹீஸ் கோடீஸ்வரர் ஆக இருந்தால் அவர் ஏன் ஜூஸ் கடை நடத்த வேண்டும். இந்த விவகாரம் நிச்சயம் மோசடி தான் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தாமரை மலர்கிறது
மார் 30, 2025 00:22

இதெல்லாம் கணினி தவறால் நடந்த சிறு தவறுகள் தான். விரைவில் மத்திய அரசு சரிசெய்து உண்மையான ஏமாற்றுபேர்வழிகளின் மீது கேசு போடப்படும். இதை ஊதி பெரிதுபடுத்த எதிர்க்கட்சிகள் எத்தனிக்க கூடாது.


spr
மார் 29, 2025 21:24

இவையெல்லாம் தவறான கணினி மயமாக்கலின் விளைவுகள். இன்னும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடு வந்தால், அதிகமான பிரச்சினைகள் உருவாகும். ஆனால் அரசுக்கு இது குறித்தெல்லாம் கவலையில்லை தவறான செயல்பாடு என்றால், தொடர்புடைய அதிகாரிகளை பணி விலக்கம் செய்தால் அதிகாரிகளுக்கு ஓரளவு பொறுப்பு வரும். ஆனால் சில நேரங்களில் இது போல சிறுகுறு வியாபாரிகள் சிறிது தொகைக்கு ஆசைப்பட்டு பினாமிகளாக செயலாற்றுவதால் பிரச்சினையில் சிக்க வாய்ப்புள்ளது.


தமிழ்வேள்
மார் 29, 2025 21:03

இந்த வியாபாரிகள் வசம் இல்லாத பணமே இல்லை... சில்லறை விற்பனையில் பல லட்சம் வியாபாரம்.. ஆனால் ஆளைப் பார்க்க பிச்சை காரர்கள் போல வேஷம் போட வேண்டியது..ப.சி. இவர்கள் ஆண்டுகளுக்கு ரூபாய் ஆயிரம் மட்டுமே வரியாக கேட்டார்..ஆனால் முடியவே முடியாது என்று சாதித்தார்கள் ஒரு பெட்டிகடை ஓனருக்கு நான்கு வீடு, நான்கு கடைகள், ஆட்டோ,வாடகை கார்கள் சர்வ சாதாரணமாக இருக்கிறது.. ஆனால் வருமானம் இல்லையாம்.யாருக்கு காது குத்துகிறார்கள்? டிஜிட்டல் பேமெண்ட் காரணமாக இவர்கள் வருமானம் வெளிப்படையாக அரசுக்கு தெரிகிறது.... ஐநூறு ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க வேண்டும்..


KRISHNAN R
மார் 29, 2025 20:51

எல்லாம் கேட்டு எல்லாம் இணைத்து விடுங்கள் ஆனால் தரவு பாதுகாப்பு உள்ளதா என்றால் பதில் வராது.


பல்லவி
மார் 29, 2025 18:55

வடக்கன்ஸ் அட்டகாசம் தாங்கல


Ramalingam Shanmugam
மார் 29, 2025 18:35

gst officers negligence


Mecca Shivan
மார் 29, 2025 17:25

ஒரு நிறுவனத்தை பதிவுசெய்ய GST அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் குறைந்தது ஐந்தாயிரம் அதிகபட்சம் ஒன்றியத்திற்கும் குன்றியத்திற்கும்தான் தெரியும் .. ஒரு நிறுவனத்தை மூட அவர்கள் வாங்கும் குறைந்த பட்ச தொகை பத்தாயிரம் .. இல்லையென்றால் நீங்கள் இவ்வளவு அபராதம் கட்டவேண்டும் என்று மிரட்டுவார்கள் .. தாங்கள் பிறந்ததே ஆஃபீசராகத்தான் என்ற நினைப்பு வேறு .. அதாவது அனைத்தும் லஞ்சம் தலைவிரித்தாடும் கூடவே சுங்க துறை வேறு .. இதில் மத்திய ஜீ எஸ் டி மற்றும் மாநில அதிகாரிகளுக்கு பங்கு உண்டு ..இவர்களுக்கு கூட்டணி யார் என்றால் வருமானவரித்துறை மற்றும் மாநில கட்டுப்பாட்டில் உள்ள சில டெபார்ட்மெண்டுகள் .. இவர்களுக்கெல்லாம் பாஸ் ED ..இவர்களின் ஆட்டமெல்லாம் நடுத்தர மற்றும் குறு வியாபிரிகள் மற்றும் தொழிற் முனைவோரிடம் மட்டுமே ..


அப்பாவி
மார் 29, 2025 17:10

இன்கம்டாக்ஸ் ஒரு தத்தி நிறுவனம். நேரா போய் விசாரிக்க மாட்டாங்க. எல்லாமே கம்பியூட்டரிலேயே பண்ணி முடுச்சி, நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிருவாங்க. அதுக்கு நாம பதில் அனுப்ப முடியாது. நாம இன்கம் டாக்ஸ் இணையதளத்தில் பதிஞ்சு நம்ம புகாரை பதிவு செய்யணும். அவனுங்களை பகைச்சு ஒண்ணும் பதிய முடியாது. உடனே வரிஞ்சு கட்டிக்குட்டு வரி வசூலிக்க வந்துருவாங்க. திராபையான நிறுவனம்.


சத்யநாராயணன்
மார் 29, 2025 16:45

இது அரசு அதிகாரிகளின் நிர்வாக திறமை இன்மையின் வெளிப்பாடுதான் வேறு ஒன்றும் இல்லை


சமீபத்திய செய்தி