உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எட்டாவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

எட்டாவது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன?

புதுடில்லி: எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அகவிலைப்படியை(DA) அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது மற்றும் சம்பள உயர்வு ஆகியவை தேவை என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் 8வது சம்பள கமிஷன் அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவுக்கு இன்னும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. அதேநேரத்தில், இந்த கமிஷன் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அவர்கள் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி( DA)யை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கையை 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட 7 வது சம்பள கமிஷனிடமும் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால், அரசு ஏற்கவில்லை.1996 -2006ல் அமைக்கப்பட்ட 5வது கமிஷன், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டியதும் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தது. இதன்படி 2004ம் ஆண்டு அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்பட்டதால் மத்திய அரசுக்கு செலவு அதிகம் ஏற்பட்டது. ஆனால், 2006ல் 6வது சம்பள கமிஷன், இந்த முடிவை மாற்றியது.சம்பள உயர்வுதற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.18 ஆயிரமாக உள்ளது. தற்போது இரு மடங்கு அதிகரிப்பு என்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.36 ஆயிரமாக மாறும்.ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது குறைந்தபட்ச மாத பென்சன் ஆக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது அதிகரிக்கப்பட்டால் அவர்களின் குறைந்தபட்ச பென்சன் ரூ.18 ஆயிரமாக அதிகரிக்கும்.8வது சம்பள கமிஷன் தலைவர் நியமிக்கப்பட உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து வருவதாகவும், விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.RAMACHANDRAN
மார் 16, 2025 07:59

முந்தய சம்பள கமிஷன்களில் வேலை செய்ய வெளி நாடு செல்லும் மக்கள் வாங்கும் சம்பளத்தை சுட்டிக் காட்டி அபரிமிதமான சம்பள உயர்வு பெற்று அரசு பணியை நேர்மையாக செய்யாமல் லஞ்சத்தின் அடிப்படையில் செய்து சொத்து குவித்தவர்களுக்கெல்லாம் எட்டாவது சம்பள கமிஷன் அமைத்துள்ளது நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகும்.


Muthu Muthu
மார் 16, 2025 06:25

பிறரை குறை கூறுவதற்கு தாங்கள் படித்து அரசு வேலையில் சேரலாம் அ தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து அரசு வேலையில் சேர்க்கலாமே


Muthu Muthu
மார் 16, 2025 06:22

பிறரை குறை கூறுவதற்கு பதில் தாங்களும் படித்து அரசு வேலை சேரலாம் அ தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து அரசு வேலையில் சேர்களாமே


தத்வமசி
மார் 15, 2025 20:50

சம்பளக் கமிஷன் என்பது ஒரு போங்கு. தனியார்களில் சாதாரண சம்பளம் இன்னும் இருபதாயிரத்தை தாண்டவில்லை. பத்து வருடங்கள் வேலை செய்பவருக்கும் இன்னும் ஐம்பதினாயிரம் தாண்டவில்லை. நாட்டின் வளம் இப்படித்தான் இருக்கிறது. இவர்கள் லட்சத்தைக் கடந்து சம்பளம் வாங்கிக் கொண்டு இப்போது இன்னும் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். அரசுப் பணியாளர்களின் வேலையின் தரம் அந்த அளவுக்கு உயர்ந்துள்ளதா என்பதை உள்ளம் தொட்டு சொல்லுங்கள். இல்லை இந்தியா கடனில்லாத நாடாக உள்ளதா ? மத்திய அரசு ஏற்றினால் மாநில அரசுகளும் ஏற்ற வேண்டும் என்று எண்ணம் உருவாகும். அந்த அளவுக்கு மாநிலங்களின் நிதி நிலை இருக்கிறதா ? பல மாநிலங்கள் நிதிச் சுமையால், இலவசங்களால் தள்ளாடத் துவங்கி விட்டன. தமிழகத்தின் கடன் சுமை பத்து லட்சம் கோடியை நெருங்குகிறது. இதற்கு நாட்டின் குடிமகன் என்கிற விதத்தில் இவர்களுக்கு அக்கறை இல்லையா ? இந்த சம்பள ஏற்றம் தினப்படி பொருட்களின் விலைவாசி ஏற்றத்தில் சென்று முடியும் என்பது இவர்கள் சிந்திக்காத செய்தி. இவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கும் இவர்களில் நூறு சதவிகிதம் லஞ்சம் வாங்காமல் நேரத்திற்கு வேலை செய்கிறார்களா ? போராட்டம் நடத்த முன்வரும் சங்கங்களும் அதன் தொண்டர்களும் நூறு சதவிகிதம் லஞ்சம் வாங்கமால், உரிய நேரத்தில், மக்களை அலைய விடாமல் தங்களின் வேலைகளை செய்ய ஏன் முன் வரக்கூடாது. அதை முதலில் செய்யுங்கள்.


Raja Giri
மார் 16, 2025 00:41

காசுக்கு ஓட்டு போடுற உங்கள மாதிரி ஆளுங்கள ஆள தான் நாட்டுக்கு இந்த நிலைமை


Ray
மார் 28, 2025 19:42

ஓட்டுக்கு காசு வாங்கறது தப்புதான் அதில் மாற்றுக கருத்து இல்லை. ஆனாலும் இங்கே ஒரு விஷயம் கண்டு கொள்ளப் படுவதில்லையா இல்லை மறைக்கப் படுகிறதா? வாக்குக்கு காசு கொடுக்காத கட்சி நிதி வசூலிப்பது என்? தலைகள் கலர் கலரா வெளிநாட்டு ஆடைகளை வாங்கி குவிக்கவா? தின்று கொழுக்கவா? தேர்தல் நிதிப் பத்திரம் என்றொரு திட்டம் கொண்டு வந்து அது சம்பந்தமான விபரங்களை வெளியிடத் தேவையில்லையென்றும் தகவல் அறியும் சட்டத்திலிருந்தும் விலக்களித்து சிறப்பு சட்டத்தையே கொண்டு வந்தது என்? அந்த நிதி ஆளும் பிஜேபிக்குத்தான் அதிகபட்ச நிதி வந்துள்ளது என்றும் செய்தி வந்ததே. நீதி மன்றம் சென்றபோது சட்டத்தையே செல்லாது என்றும் அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வந்ததே. நம்மாளுங்க ரீபண்ட் செய்துட்டார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை