உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டேங்கர் லாரி மோதி முதியவர் பலி

டேங்கர் லாரி மோதி முதியவர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்ற முதியவர் தடுப்பில் மோதி விழுந்த போது, டேங்கர் லாரியில் அடிபட்டு இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மங்கலம் அணையை சேர்ந்தவர் பவுலோஸ், 60. இவர், நேற்று காலை, 11:00 மணிக்கு, பாலக்காடு - -திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வடக்கஞ்சேரி பகுதிக்கு ஸ்கூட்டரில் சென்றார்.அப்போது, இரட்டைக்குளம் பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வைத்திருந்த தற்காலிக தடுப்பில் மோதி சாலையில் விழுந்தார். அந்நேரத்தில், அதே திசையில் வந்த டேங்கர் லாரி, பவுலோஸ் மீது ஏறியது. விபத்தில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.தகவல் அறிந்து வந்த ஆலத்தூர் போலீசார், பவுலோஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆலத்தூர் தாலுகா மருத்துவமனைத்து அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !