உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு

நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு

அமிர்தசரஸ்: பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டபோது அமிர்தசரஸில் 69 வயது முதியவர் உயிரிழந்தார்.கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், இஸ்லாமாபாத்துடனான ராஜதந்திர உறவுகளை குறைத்தல் மற்றும் குறுகிய கால விசாக்களில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன்படி பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.இது குறித்த அதிகாரிகள் கூறியதாவது:பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் வாஹீத் 69, கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தார். அவர் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்காக ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஸ்ரீநகரிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்க்கு அழைத்து வந்தது. அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து அழைத்து செல்வதற்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
மே 01, 2025 20:30

திருடனுங்க வந்தா போக மாட்டாங்க.


sridhar
மே 01, 2025 19:56

இங்கே சில ஜந்துக்களுக்கு திடீர் மனிதாபிமானம் வந்து அழுமே .


Sudha
மே 01, 2025 16:17

ஆகவே அவர் இந்தியர் ஆகி விட்டார்


Ramesh Sargam
மே 01, 2025 12:13

மாரடைப்புக்கு காரணம், அவருக்கு முன்னமே தெரிந்து விட்டது, தான் பாக்கிஸ்தான் சென்றால் அங்கு நிம்மதியாக இருக்கமுடியாது, என்கிற வேதனையில் மாரடைப்பு ஏட்பட்டு இந்தியாவிலேயே இறந்தார்.


R. SUKUMAR CHEZHIAN
மே 01, 2025 10:52

பாகிஸ்தானுக்கு போவதும் சுடுகாட்டுக்கு போவதும் ஒன்று தான். பாரதம் புனிதமான புண்யபூமி ஆண்டவனே அவதரித்த பூமி, ரிஷிகள், சித்தர்கள், மஹான்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் அவதரித்த தேவபூமி.


நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 12:58

கரெக்டு


நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 10:50

அவருடைய சொந்த நாட்டுக்கு செல்லுங்க என்றால் மாரடைப்பு வந்திருக்கு , அப்போ இந்தியாவில் வசிக்கும் வந்தேறிகளுக்கு ?


சமீபத்திய செய்தி