உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்

பாலக்காடு; பாலக்காடு அருகே, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு மணலடி பகுதியை சேர்ந்தவர் பாத்தும்மாபி, 80, தனித்து வாழும் இவருக்கு அரசு திட்டத்தில் வீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் இருந்து, 15 நாட்களுக்கு முன் அருகே உள்ள வாடகை வீட்டிற்கு மாறினார்.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, கனமழை பெய்தது. அப்போது, பழைய வீட்டின் கழிவறை அருகே சென்றபோது, திடீரென வீட்டின் சுவர் இடிந்து, பாத்தும்மாபி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.மருத்துவமனையில், பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணார்க்காடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ