உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரசாரத்தில் ஏ.ஐ., பயன்படுத்தும்போது வெளிப்படையா சொல்லணும்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்

பிரசாரத்தில் ஏ.ஐ., பயன்படுத்தும்போது வெளிப்படையா சொல்லணும்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி பிரசாரம் செய்யும் போது, அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக, தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரத்தின் போது, கண்ணியம் மற்றும் நல்லொழுக்கத்தை பேணி காக்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5uqbn7ow&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0படங்கள், வீடியோ, ஆடியோ மற்றும் பிற பிரசாரங்கள் செய்யும்போது, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கி இருந்தாலோ அல்லது திருத்தம் செய்திருந்தாலோ, அது பற்றிய குறிப்பை இடம்பெறச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (ஏ.ஐ.,) தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தும் போது, அதை பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
ஜன 16, 2025 14:26

ஏ ஐ யை விடுங்க. இந்த சிவாஜி க்ரிஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் இருவருக்கும் நாக்கில் சுளுக்கெடுக்க ஏற்காதவது வழி கண்டுபிடியுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை