உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோசடியை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன்; 100% ஆதாரம் இருக்கிறது என்கிறார் ராகுல்

மோசடியை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன்; 100% ஆதாரம் இருக்கிறது என்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கர்நாடகாவில் ஒரு இடத்தில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்ததற்கான உறுதியான, 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார். பீஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.இதுவரை 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 26 லட்சம் பேர் வேறு தொகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4u5g5t6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று, பீஹாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, ஆதரிப்பது தொடர்பாக தேர்தல் கமிஷனை காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷன் தனது வேலையைச் செய்யத் தவறிவிட்டது. இன்று அவர்கள் ஏதோ ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள், இது முழு முட்டாள்தனம். தேர்தல் கமிஷன், இந்திய தேர்தல் கமிஷன் போல் செயல்படவில்லை.கர்நாடகாவில் ஒரு இடத்தில் தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்ததற்கான உறுதியான, 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது. தனது கட்சி ஒரு தொகுதியை மட்டுமே ஆய்வு செய்து ஏற்கனவே பெரிய முறைகேடுகளைக் கண்டுபிடித்தது.ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் நாடகம் இதுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்கள், அவர்களின் வயது என்ன? 50, 45, 60, 65. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்ய தேர்தல் கமிஷன் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

vadivelu
ஜூலை 25, 2025 09:50

அறிவார்ந்த மக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ராகுலிடம் இருந்து ஆதாரங்களை பெற்று உச்ச நீதிமன்றத்தில் தீர்வு கண்டு இந்த தேர்தல் ஆணையத்தியும், மோடியையும் தண்டிக்கலாமே. அப்படி செய்யாதவரை ராகுல் ஒரு விளையாட்டு பிள்ளையாகத்தான் பார்க்க படுவார்.


M Ramachandran
ஜூலை 24, 2025 23:54

எத்தனை முறை மூக்கு அறு பட்டாலும் திருந்தாத ஜென்மம். இந்த ஆள் கான்க்ரசில் யிருக்கும் வரை. காங்கரஸ் ஆட்சியை ஒரு காலும் பிடிக்க முடியாது. பேசுவதெல்லாம் அர்த்த மற்ற தாகவும் நிந்தநை செய்வதும் தான் வேலை. தாங்கள் ஆட்சிய்க்கு வந்தால் மக்களுக்காயென்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்று பேசுவதில்லை.இபேற்பட்ட சுய நலமி அயல் நாட்டு கொத்தடிமையாய்ய்ய நம்பிமக்கள் எப்படி ஆட்சிய செய்ய உதவுவார்கள். இப்போதுக்குள்ள நம் நாட்டின் நிலமை வல்ல அராசுகளையே ஆட்டம் காட்ட வைத்துள்ளது பொருளாதாரத்தில் நல்லமுன்னேற்றம். அயல் நாடுகளில் இப்போது uk பெட்ரோல் விலை லிட்டர் $ 135 முதல்139 வரை விற்கிறார்கள். நம் நாட்டில் விலை அப்படியெவிலை. ஏராமல் இருக்கு. இஙகு பேரூந்து மற்றும் ரயில் கட்டணங்கலும் அதிகம்.


சிட்டுக்குருவி
ஜூலை 24, 2025 22:44

ஒரு சுமார் 60 ஆண்டுகாலம் மதிய அரசு பதவியில் இருந்த கட்சியின் அறிவிக்கபடாத தலைவராக இருப்பவருக்கு ஒரு தொகுதியிலோ அல்லது ஒருசில தேர்தல் பூத்துகளிலோ தவருநடக்கும் பட்சத்தில் என்ன செய்யவேண்டும் என்றுகூட தெரியாதா ?பத்திகைகளுக்கு பேட்டி அளித்தால் தங்கள் பொறுப்பு தீர்மத்துவிடும்மா ? ஒவ்வொரு மாநிலத்தில் மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் இருப்பதுகூடவா தெரியாது .அதனால் தான் நீங்கள் எந்தஒரு பொறுப்பான பதவிக்கும் லாயக்கற்றவர் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் .வேறு ஏதாவது தொழில் தெரிந்தால் பார்ப்பதுதான் விவேகம் .


இராம தாசன்
ஜூலை 24, 2025 20:07

அப்போ கர்நாடகாவில் கான்கிராஸ் ஆட்சி அமைத்தது இப்படி மோசடி செய்து என்று சொல்லுகிறாரோ.


Rajasekar Jayaraman
ஜூலை 24, 2025 19:51

ஊழல் நீதிபதிகள் இருக்கும் வரை ராகுல்கானுக்கு கொண்டாட்டம் தான்.


தாமரை மலர்கிறது
ஜூலை 24, 2025 19:06

ஆடமுடியாதவள் மேடை கோணலாக இருக்கிறது என்று குறை சொல்வாள் . அதுமாதிரி ஜெயிக்கமுடியாத ராகுல் தேர்தல் கமிஷனை குறை சொல்கிறார். விரைவில் அமெரிக்காவில் கூட இல்லாத மொபைலில் ஓட்டுபோடும் வசதியை இந்தியர்களுக்கு தரபோவதாக சொல்லும் தொழில்நுட்பத்தில் வளர்ந்த தேர்தல் கமிஷனை ராகுல் குறை சொல்வது, கண்டிக்கத்தக்கது.


பேசும் தமிழன்
ஜூலை 24, 2025 19:05

பப்பு உங்கள் கான் கிராஸ் கட்சி மற்றும் இண்டி கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.... மோசடி செய்து தான் வெற்றி பெற்றீர்களா ???....அப்போ நீங்கள் எல்லாம் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா ???


KRISHNAN R
ஜூலை 24, 2025 18:45

இவர்கள் குடும்பம் மோசம் என்று சொல்கிறார் என்று தெரிகிறது


பாரத புதல்வன்
ஜூலை 24, 2025 18:29

பப்பு.... இது 2025, நீங்க சொல்றது உங்களோட பாட்டி ஆட்சி யில் நடந்தது.... இப்போ தான் உஙகளுக்கு நினைவு வந்ததா பப்புகான்...! அப்படி ஓரமா போங்க,அல்லது பாட்டையாவில் போய் விளையாடுங்க...


R.MURALIKRISHNAN
ஜூலை 24, 2025 18:21

நீங்க இன்னுமா இத்தாலிக்கு போகவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை