உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; மத்திய அரசு தரப்பில் பதில் தர முடியாது என்கிறார் கிரண் ரிஜிஜூ

தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; மத்திய அரசு தரப்பில் பதில் தர முடியாது என்கிறார் கிரண் ரிஜிஜூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; அவர்கள் சார்பாக மத்திய அரசு பதில் தர முடியாது என மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: தேர்தல் கமிஷனுக்கும், காங்கிரசிற்குமான பிரச்னையை விவாதிக்க வே ண்டிய இடம் பார்லிமென்ட் அல்ல. பிரச்னையை தேர்தல் கமிஷனில் தான் காங்கிரஸ் விவாதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் தொடர்பான பிரச்னையில் அவையில் கூச்சல், குழப்பம் எழுப்ப கூடாது. தேர்தல் கமிஷன் தன்னாட்சி அமைப்பு; அவர்கள் சார்பாக மத்திய அரசு பதில் தர முடியாது. தேர்தல் கமிஷனின் செய்தி தொடர்பாளர் மத்திய அரசு கிடையாது.இன்று பார்லிமென்டில், குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை சிறப்பு விவாதம் மூலம் கவுரவிக்க உள்ளோம். அவரது விண்வெளி பயணம் மற்றும் இந்தியாவின் வருங்கால விண்வெளி பயணம் குறித்து விரிவாக விவாதிப்போம். அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பங்கேற்றது போலவே, குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் இந்திய விஞ்ஞானிகளை அனைத்து கட்சிகளும் வாழ்த்தி இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Suresh Ulaganathan
ஆக 19, 2025 13:41

காங்கிரஸ் செய்த தவறு தவறு என்று கூறும் பிஜேபி, ஏன் மீண்டும் காங்கிரஸ் காலத்தில் செய்த நடைமுறையை செய்கிறீர்கள். காங்கிரஸ் தானே EVM மெஷின் கொண்டு வந்தது, பிறகு ஏன் அதை தேர்தலில் பயன் படுத்த வேண்டும்.


மனிதன்
ஆக 18, 2025 19:47

இங்கே கருத்தெழுதும் பாஜக மற்றும் RSS நண்பர்களிடம் சில கேள்விகள், மனசாட்சிக்கு உட்பட்டு பதில் சொல்லுங்கள்..பதில்தான் வேண்டும் மடைமாற்றுதல் அல்ல... ராகுல் கேட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அவரை மிரட்டும் தொனியில் கேள்விகள் கேட்கிறதே தவிர ஏன் உரிய பதிலளிக்கவில்லை??? ஏன் இரவோடு இரவாக CCTV காட்சிகளை புதிய ஆட்டம் இயற்றி டெலிட் செய்தது??? நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேர்தல் கமிஷன் அதிகாரி, பெண்கள் வந்து ஓட்டுப்போடும் காட்சிகளை கொடுத்தால் அது தப்பாகிவிடும் என்று ஒரு கேவலமான பதிலை கூறினார்.., பிறகு CCTV ஏன் வைத்தார்கள்? குளியலறை காட்சிகளையா கொடுக்கிறார்கள்??? மேலும் நிறைய வீட்டு எண் 000 என்று இருக்கிறதே என்று கேட்டதற்கு, வீடில்லாமல் நிறைய பேர் ரோட்டில் வாழ்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒட்டு வேண்டாமா என கேட்கிறார் சரி, பிறகு ஏன் இருப்பிடச்சான்று போன்ற 11 ஆவணங்களை கேட்கிறார்கள்?? ஆவணம் இல்லாதோரை ஏன் தூக்கினார்கள்??? இப்படி யாரும் யோசிக்காத, கேவலமான, முன்னுக்குப்பின் முரணான பதில்களை ஏன் தேர்தல் கமிஷன் கொடுக்கிறது??? இதுபோன்ற சாமானியனின் பல கேள்விகளுக்கு வசைபாடாமல், பாஜக மற்றும் நண்பர்கள் உண்மையாக பதில் சொல்லுங்கள்


guna
ஆக 18, 2025 20:35

ஒரே பதில் தான். முதலில் கையெழுத்து போட்டா பதில் வரும்...அதேநேரம் தவறாக இருந்தால் ஏழு வருடம் களி திங்கனும்....சரியா


guna
ஆக 18, 2025 20:37

மனிதன்....உண்மையாக இருந்தால் போய் கேசு போடலாமே.....எதுக்கு பெரிய மொக்கை கருத்து


தாமரை மலர்கிறது
ஆக 18, 2025 19:15

உலகிலேயே கண்ணியமான, நாணயமான, நேர்மையான, சிறப்பான தேர்தல் கமிஷன் நம்முடையது என்று பல சர்வே அமைப்புகள் பாராட்டியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் ஒரு ஓட்டுக்கூட கள்ளத்தனமாக வோட்டிங் மெஷினில் போடமுடியாது. பல தவறான ஆவணங்களை காட்டி தோல்வி விரக்தியில் ராகுல் ஒப்பாரி வைக்கிறார். இந்த லட்சணத்தில் டிஜிட்டல் மோசடிக்கு வழிவகுக்க, போல் பூத் வீடியோ வேண்டும் அடம்பிடிக்கிறார்.


Gokul Krishnan
ஆக 18, 2025 16:20

தேர்தல் ஆணையம் மற்றும் ஆணையர் தன்னாட்சி என்பது டிசம்பர் 2023 இக்கு பின் பிஜேபி அரசு கொண்டு வந்த சட்டத்தை விளக்கி கூறினால் லட்சணம் தெரிந்துவிடும்


vivek
ஆக 18, 2025 20:38

கோகுல...அப்போ நீதிமன்றம் போடலாமே....என்ன தயக்கம்....


Varadarajan Nagarajan
ஆக 18, 2025 15:04

இதுபோல வாக்கு திருடிதான் கர்நாடகாவிலும் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் ஜெயித்தார்களா? அதென்ன இபிஜேபி வர்கள் ஜெயித்தால் இவிஎம் சரியாக வேலைசெய்கின்றது. பி ஜே பி ஜெயித்தால் முறைகேடு. வாக்குதிருட்டுக்கு காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் ஆணையம் துணைபோக வேண்டுமா? தற்பொழுது தேர்தல் ஆணையம் பிஜேபிக்கு சாதகமாக செயல்படுகின்றதென்றால் இதர்க்கும்முன்பு காங்கிரஸுர்தான் எப்படி செயல்பட்டார்கள் என சொல்லவேண்டிய கடமை ராகுலுக்கு உள்ளது.


GMM
ஆக 18, 2025 14:15

தேர்தல் கமிஷன் அரசியல் சாசன அமைப்பு அது கொலிஜியம் போன்ற சுய நீதிபதி தேர்வு நிர்ணய அமைப்பு கிடையாது. ஆணையம் சார்பாக மத்திய அரசு பாராளுமன்ற, நீதிமன்றத்தில் பதில் தருவது சட்ட விரோதம். கிரண் பேட்டி தெளிவாக புரியும்படி உள்ளது.


pakalavan
ஆக 18, 2025 12:49

எலக்சன் கமிஷன் என்பது பிஜேபிக்காரனுங்களுக்கானது, அதை பிஜேபிக்காரனுங்களுக்குத்தான் பயன்படுத்துவோம்,


sankar
ஆக 18, 2025 14:02

விவரம் இல்லாத முரசொலி பக்தாஸ் இப்படி பேசுவதில் வியப்பு இல்லை - சுய நினைவு கோபாலபுரத்தில் அடகுவைக்க பட்டுவிட்டதே


G Mahalingam
ஆக 18, 2025 16:49

தேர்தல் ஆணையம் திமுகவுக்கு ஆதரவாக செயல் படுகிறது. 2019 முதல் எப்படி 40 சீட்டையும் வெற்றி பெறுகிறது.


venugopal s
ஆக 18, 2025 12:42

பதில் தர மாட்டார்கள் ,ஆனால் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து மட்டும் வாங்குவார்கள்!


vivek
ஆக 18, 2025 13:39

உனக்குனெப்பா...தப்ப தகவல் இருந்தா ஏழு வருஷம் களி திங்கப்போறது அவர் தானே


M S RAGHUNATHAN
ஆக 18, 2025 12:41

Mr Rahul should ask his mother as to how she voted in 1980 parliamentary election, when she was not a Bonafide citizen of India. The SC should take up the case and enquire. If there is truth in this, SC should straightaway disqualify her from RS. This fake arrogant Ghandhi parivar is under the impression that they are above the law. Why these people are to be given special privileges even after 34 years like biggest bunglaw in Lutyens Delhi for mother, s and daughter for each.


Suresh Ulaganathan
ஆக 19, 2025 13:43

Even we can disqualify who are all not nominated by the people like Finance Minister.


V.Mohan
ஆக 18, 2025 12:37

இந்த பள்ளிப்படிப்பு முடிக்காத தற்குறி பின்னால் அவங்க எம்.பி.க்களும், மம்முதா பேகம் கட்சியினரும் புத்தி பேதலித்து போகட்டும். திமுக எம்.பி.க்கள் முக்கால்வாசிப் பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள். அவர்கள் ஏன் இந்த தற்குறியின் தேர்தல் ஓட்டு பொய் புகாருக்கு முட்டுக் கொடுத்து பார்லிமெண்ட்டை நடக்க விடாமல் செய்யணும்?? எந்த ஆளும் கட்சியாவது எப்பொழுதாவது எந்த எதிர்கட்சியுடைய சொல்படி பார்லிமெண்டை நடத்திய சரித்திரம் உண்டா? எதிர்கட்சியானது மக்களிடம் ஆளும்கட்சி செய்யும் தவறை பெரிதாக எடுத்துரைத்து அடுத்த தேர்தலில் அவர்களை தோற்கடிக்க முயல வேண்டும். அதுக்கு தெம்பில்லாத எதிர்கட்சிகள் வீட்டில்குப்புற படுத்து கனவாவது காணலாம். .


சமீபத்திய செய்தி