உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு தேர்தல் கமிஷன் கூட்டத்தில் முடிவு

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு தேர்தல் கமிஷன் கூட்டத்தில் முடிவு

டில்லியில் நேற்று தேர்தல் கமிஷன் தலைமையகத்தில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பிர் சிங் சாந்து, விவேக் ஜோஷி தலைமையில், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

ஓட்டளிக்கும் அதிகாரம்

இந்த கூட்டத்தில் தான், வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவானது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், ஆதார் அடையாள அட்டை எண்ணும் விரைவில் இணைக்கப்பட உள்ளன.இதுகுறித்து, நிருபர்களிடம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது:அரசியல் அமைப்புச் சட்டத்தின் 326வது பிரிவின் படி, இந்திய குடிமகனுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழலில், ஆதார் அடையாள அட்டை தான், அந்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தேர்தல் கமிஷன் வழங்கும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் அடையாள அட்டையை இணைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, ஆதார் அடையாள எண் ஆணையம், தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின் தக்க முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.சில நாட்களுக்கு முன், பார்லிமென்டில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை எண்கள், பல மாநிலங்களில் ஒரே மாதிரியாக இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்தனர்.

நலத்திட்ட பணிகள்

இதற்கிடையே, நேற்று நடந்த கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் விரைவில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து தக்க முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.முன்னதாக, 2015 பிப்ரவரியில், பல மாநிலங்களில் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்களை, ஆதார் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி துவங்கியது. 'அப்போது அதற்கு முட்டுக்கட்டை போட்ட உச்ச நீதிமன்றம், 'ஆதார் அடையாள அட்டையை, அரசுகளின் நலத்திட்டம் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தேவராஜன்
மார் 19, 2025 19:39

சிறப்பான வரவேற்க வேண்டிய முடிவு. வரும் காலங்களில் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் இவை இரண்டு மட்டுமே முதன்மை (primary Identity) தனி நபர் அடையாள ஆவணமாக அறிவிக்க வேண்டும். மற்ற அனைத்து ஆவணங்களும் இந்த இரண்டின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.


अप्पावी
மார் 19, 2025 15:50

அது எப்புடிரா? இங்கே ஆதார் அடையும் அட்ரஸ் ஆவணத்த்சியும் குடுத்தாத்தானே ஓட்டர் அட்டை குடுக்குறாங்க? இப்போ அதே அட்டையை ஆதாரிட இணைக்கப் போறாங்களாமா? என்ன எழவு லாஜிக் இது? இவனுக்கெல்லாம் கம்பியூட்டர் ப்ரொகிராமிங் ஏதாவது தெரியுமா? இல்லே ஆதார் இல்லாம அட்ரஸ் ஃப்ரூப் இல்லாம ஓட்டர் ஐ.டி எங்கே குடுக்கறாங்க சொல்லுங்க.


GMM
மார் 19, 2025 07:47

326 வது பிரிவின் படி குடிமகனுக்கு ஓட்டளிக்கும் அதிகாரம். ஜாமின் வழங்க, பத்திர பதிவுக்கு இரு சாட்சிகள் தேவை. தற்போது தேசிய அளவில் குடிமகனை அடையாள படுத்துவதும் சாட்சி ஆதார். வாக்காளர் எண் ஆதார் இணைப்பு கட்டாயம் தேவை. தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பின் முடிவில் நீதிமன்றம், தனி நபர் தலையிட முடியாது. தேசிய அளவில் பிறப்பு, இறப்பு இணைக்க வேண்டும். முகவரியை உறுதி செய்ய நாடு முழுவதும் உள்ளூர் தபால் அதிகாரிக்கு அதிகாரம் வழங்க வேண்டும். வாக்காளர் அட்டை தேர்தலுக்கு முன் புதுப்பிக்க வேண்டும். மொபைல்ஸ் எண் இணைக்க வேண்டும்.


nagendhiran
மார் 19, 2025 05:34

இப்ப பாருங்க சிலதுங்க கட்டாயபடுத்த கூடாது? தனி மனித உரிமை போகுதுனு கூவுங்க? இதுங்களுக்கு சில கட்சிகள் ஆதரவும் அளிப்பாங்க? காட்டி கூட்டி?


Kasimani Baskaran
மார் 19, 2025 03:54

கள்ளவோட்டு போட்டால் 10 வருடம் சிறை என்றும் சொல்லவேண்டும்.


தாமரை மலர்கிறது
மார் 19, 2025 02:26

தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக சிறப்பாக செயல்படுகிறது. அதன் உரிமைகளில் சுப்ரிம் கோர்ட் தலையிட முடியாது. இரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னிச்சையான துறைகள். ஒருவரை ஒருவர் அதிகார வரம்புமீறி செயல்பட கூடாது. வரம்பு மீறினால், பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கடிவாளம் போடநேரிடும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 01:23

முதல்ல வாக்களிப்பை கட்டாயமாக்குங்க ...... அரசியலுக்கு கிரிமினல்களின் வரவு குறையும் ....


Shankar
மார் 19, 2025 01:01

வரவேற்கப்படவேண்டிய விஷயம். இதனால் கள்ள ஓட்டுக்களை ஒழிக்கலாம்.


Appa V
மார் 19, 2025 01:00

சரியான முடிவு .. ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டு வாக்காளர் அட்டையை கேன்சல் செய்து விடலாம் ..ஒருவர் இறந்தவுடன் ஆதார் எண் கேன்சல் செய்தவுடன் அந்த எண்ணுடன் சம்பந்தம் இருக்கும் சிம்கார்டு மற்றும் வாக்காளர் அட்டையையும் கேன்சல் செய்யும் வழிமுறைகளையும் அமல் படுத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை