உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனர் ஹெலிகாப்டர் திடீர் தரையிறக்கம்

தேர்தல் கமிஷனர் ஹெலிகாப்டர் திடீர் தரையிறக்கம்

பிதோராகார், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரகண்ட் சென்றுள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், மாநில கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் விஜய் குமார் ஜோக்டன்டே உட்பட நான்கு பேர் நேற்று மிலாம் பனிப்பாறை பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.போதுமான வெளிச்சம் இல்லாததாலும், மோசமான வானிலை காரணமாகவும் தொடர்ந்து ஹெலிகாப்டரை விமானியால் இயக்க முடியவில்லை.இதனால், வழியில் முன்சியாரி அருகே ராமலாம் கிராமத்தில் உள்ள ஹெலிபேடில் அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.ஹெலிகாப்டரில் சென்ற தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், வானிலை சீரானதும் அவர்கள் முன்சியாரிக்கு அழைத்து செல்லப்படுவர் என்றும் பிதோராகார் கலெக்டர் வினோத் கிரிஷ் கோஸ்வாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ