உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு கிடைத்தது அனுமதி

இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை: எலான் மஸ்க் நிறுவனத்துக்கு கிடைத்தது அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.நாட்டின் செயற்கைக்கோள் இணைய சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியார் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023ல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது. இதையடுத்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைய சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.ஏற்கனவே, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்புதலை பெற்றுள்ள நிலையில், ஸ்டார்லிங்க், குய்பர் ஆகிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ளன. கடந்த மே மாதம் 7ம் தேதி மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு முதற்கட்ட அனுமதி வழங்கி கடிதம் அளித்தது.இந்நிலையில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் திட்டத்துக்கு நாட்டின் விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACE) முறையான அனுமதியை வழங்கி உள்ளது.இதன் மூலம் இந்தியாவில் வணிக ரீதியில் செயற்கைகோள் இணைய சேவை வழங்கும் அந்த நிறுவனத்துக்கு இருந்த தடை நீங்கி உள்ளது. இனிமேல், இந்தியாவில் சேவையை துவக்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனம் அரசிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கவேண்டும். தரைவளியிலான உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டி உள்ளது. இந்த அனுமதியானது ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும். செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்க 4,408 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. இந்த அனுமதி மூலம் இந்தியாவில் இணைய வழி சேவையில் பெரும் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஜூலை 10, 2025 00:55

There is a possibility that we may have to pay more money for data and internet services. We must ponder and save ourselves.


KR india
ஜூலை 10, 2025 00:35

ஒரு வருடம் முன்பு, Reliance Backup Internet Plan என்ற அருமையான திட்டம் இருந்தது. 10 எம்.பி வேகத்துடன், Unlimited Internet Data only, மாதத்திற்கு ருபாய் 199 + GST என்ற அடிப்படை கட்டணமாக வழங்கினார்கள். அதிக இன்டர்நெட் வேகம் தேவைப்பட்டோருக்கு, கூடுதல் மாதக் கட்டணத்துடன், வேகம் கூட்டி வழங்கப்பட்டது. இன்டர்நெட் பயன்படுத்தும், Normal User க்கும், நடுத்தரக் குடும்பத்திற்கும் , அதுவே போதுமானது. அதுதான் சிறப்பான திட்டம். ஆனால், எலான் மஸ்க் அவர்களின்Starlink services நிறுவனம் செயற்கைகோள் வழியாக வழங்கவிருக்கும், இணையதள சேவைக்கு நிர்ணயிக்கவிருக்கும், satellite Dish Device கட்டணமாக ரூபாய் 33,000 என்றும் அதுமட்டுமல்லாது, மாதா மாதம் ரூபாய் 3,000 Subion Fee for Unlimited Internet Data என்று, ஆங்கில இணையதள செய்தி economictimes.indiatimes.com குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மீண்டும் ஒரு முறை நன்கு படித்து பார்த்தேன். ஒருவேளை, வருடத்திற்க்கு ரூபாய் 3,000 ஆக இருக்குமோ என்று. Oh. My God மாதத்திற்க்கு ரூபாய் 3,000 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான செலவு செய்து, யாராவது வாங்கினால், அது பண விரயம் அது சரியான முடிவாக இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. Refundable கட்டணமாக, Satellite Dish Device ரூபாய் 33,000 என்பதும் கூட மிக அதிகம். One Time Satellite Dish Device procurement ரூபாய் 10,000 /- மற்றும் மாதத்திற்கு ரூபாய். 250 + 18% GST அல்லது வருடத்திற்க்கு ரூபாய் 3,000 +18% for Subion Fee for Unlimited Internet Data with Starting Speed of 10 MB only ஆக இருந்தால், நிச்சயம் இந்த திட்டம் வெற்றி பெரும். யாருக்கு, கூடுதல் வேகம், வேண்டுமோ, அவர்களுக்கு வேண்டுமானால், வேகத்தின் அடிப்படையில், கட்டணத்தை உயர்த்தலாம். நன்றி


முக்கிய வீடியோ