உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல்; எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு அபராதம்

இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல்; எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு அபராதம்

மும்பை: விமானத்தில், இலவச இருக்கைகள் இருந்தும் அதை மறைத்து இருக்கைக்கு என்று, 'பிரீமியம்' தொகை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்த, 'எமிரேட்ஸ்' விமான நிறுவனத்துக்கு அபராதம் விதித்ததை மஹாராஷ்டிரா நுகர்வோர் கமிஷன் உறுதி செய்தது. மஹாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் நந்தி. இவர் தன் மனைவி உடன் கடந்த, 2017, ஆகஸ்டில் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்ல, 'எமிரேட்ஸ்' விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றார். இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்தபோது, பல இருக்கைகள் 'பிரீமியம் இருக்கை' எனக் குறிக்கப்பட்டிருந்தன. இலவச இருக்கைகள் குறைவாக உள்ளன என்று நிறுவனம் தெரிவித்ததால், நந்தி கூடுதலாக, 7,200 செலுத்தி இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்தார். பயண நாள் அன்று, சில பயணியர் இலவச இருக்கைகள் பெற்றிருந் ததை இருவரும் அறிந்தனர். இதனால் தங்களை ஏமாற்றியதாக, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், 'விமான நிறுவனம், பிரீமியம் இருக்கை என்ற பெயரில் வசூலித்த, 7,200 ரூபாயை, 6 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். 'மேலும், நுகர்வோரின் மனவேதனைக்காக, 5,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக, 3,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநில நுகர்வோர் கமிஷனில் விமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய கமிஷன், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கீரன் கோவை
அக் 30, 2025 12:57

இது அனைத்து விமான நிறுவனங்களும் செய்வதுதான். இவர் செலுத்தியது ஏறக்குறைய முன்பதிவுக கட்டணம். இவர் முன் கூட்டியே வேண்டிய இருக்கையைப் பதிவு செய்யாமல் இருந்திருந்தால் ஏதாவது ஒரு இருக்காய் இலவசமாகக் கிடைத்திருக்கும்.


Rathna
அக் 30, 2025 11:03

அரேபியகாரன் கொள்ளை அடிக்க மாட்டான் என்று சில இந்திய உறவுகள் கண்ணீர்..


Abdul Rahim
அக் 30, 2025 09:27

அனைத்து விமான நிறுவனங்களும் கொள்ளை தான் அடிக்கின்றன 90 சதவீத இருக்கைகளை பிரிமியம் இருக்கைகள் என கொள்ளை அடிக்கின்றன லக்கஜ் அளவையும் குறைந்துவிட்டன இதனால் ஒரு கிலோவுக்கு 65 ரியால் கொடுத்து அதிகமா செலவழித்து தான் தங்கள் உறவுகளுக்கக ஏதேனும் வாங்கி வருகிறோம் அதிலும் இண்டிகோ கொள்ளையன் இருக்கிறானே அப்பப்பா சாப்பாடு கூட தனியாக காசு வாங்கிகொண்டுதான் தருவான் இண்டிகோ புக்கிங் என்றாலே வேண்டாமென அனைவரும் மறுக்கவேண்டும்.


Venugopal, S
அக் 30, 2025 09:05

indigo ஒரு பகல் கொள்ளையன். தடை செய்யப்பட வேண்டிய நிறுவனம்


அப்பாவி
அக் 30, 2025 05:57

நம்ம ஊர் ஆளுங்க உருவுனா கண்டுக்க மாட்டாங்க. இண்டிகோ காரன் அடிப்படை கட்டணம் ரூ 5100 போட்டு மேலே கன்வீனியன்ஸ் கட்டணம், ஏர்போர்ட் கட்டணம், கிரெடிட் கார்ட் கட்டணம் அது இதுன்னு சொல்லி 6700 ரூவா உருவுறான்.


l.ramachandran
அக் 30, 2025 08:55

ரொம்ப சரி. எமிரேட்ஸ் நல்ல நிறுவனம். அவர்களை கெடுத்ததே நம்ம இண்டிகோவும், spicejettum தான்.


Vasan
அக் 30, 2025 05:44

மருத்துவ கல்லூரிகளிலும் இதே தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை