உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பு என்ற பெயரில் வெற்றுக் கூச்சல்; ராகுல் குற்றச்சாட்டு குறித்து பாஜ விமர்சனம்

அரசியலமைப்பு என்ற பெயரில் வெற்றுக் கூச்சல்; ராகுல் குற்றச்சாட்டு குறித்து பாஜ விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'நாட்டின் வாக்காளர்களை ராகுல் அவமதித்து விட்டார். மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள்,' என்று பாஜ தெரிவித்துள்ளது. ஓட்டு திருட்டு என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இன்று ஹைட்ரஜன் குண்டை வீசப்போவதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சில ஆதாரங்களுடன், கால் சென்டர்கள், மென்பொருள் உதவியுடன் ஓட்டு திருட்டு நடந்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் காப்பாற்ற நினைப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். பீஹார் தலைநகர் பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ராகுலுக்கு அரசியலமைப்பு குறித்து புரிதல் இருக்கிறதா? அவர் உச்சநீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ராகுலுக்கு சட்டமோ, நீதிமன்ற உத்தரவுகளோ புரியவில்லை என்று நினைக்கிறேன். சும்மா, அரசியலமைப்பு, அரசியலமைப்பு என்று கூச்சலிடுகிறார்.ராகுலுக்கு மக்கள் ஓட்டளிக்காததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். அவரது செயல்களை இந்த தேசம் மறக்காது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு ஒரு மதிப்பு உள்ளது. நாட்டின் வாக்காளர்களை அவர் அவமதித்துள்ளார். மக்கள் மீண்டும் ஒரு முறை அவருக்கு தகுந்த பதிலை அளிப்பார்கள். அவரின் அனைத்து குண்டுகளும் செயல் இழந்து போகும். அவர் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன், இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ManiMurugan Murugan
செப் 19, 2025 00:45

ManiMurugan Murugan கால்சென்டர் மூலமாக ஓட்டு திருட்டு நடந்து தான் தமிழ் நாட்டில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கார் கட்சி தி மு கா கூட்டணி 40 தொகுதி வென்றதா தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டு மீது கவனம் செலுத்தி உண்மை நிலை அறிய வேண்டும்


ராஜா
செப் 18, 2025 21:22

ஆட்சேபனை இருந்தால் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தால் பிரச்சனை இருக்காது.


jss
செப் 18, 2025 19:49

அதென்ன ஹைட்ரஜன் குண்டு? .இவர் எப்போதும் வீசுவது ஹைட்ரஜன் சல்பைடு குண்டுதான். நாத்தம் சகிக்கலை. ஆளை வேறு எங்கவது போகச்சொல்லுங்க. நல்ல காற்று வரட்டும்.


Iyer
செப் 18, 2025 17:31

இவன் பாரதத்தை - பங்களாதேஷ் , நேபாள் போல் - சதிகாரர்கள் கையில் ஒப்படைக்க மிகவும் முயற்சி செய்து தோற்றான்


sengalipuram
செப் 18, 2025 17:21

. 2024 தேர்தலில் அதிக இடங்கள் கொடுத்தது தென்னிந்தியாதான் .


sankar
செப் 18, 2025 17:15

வாக்காளர் பட்டியலை எப்படி திருத்தம் செய்வது என்பதை சிறார்கள் கூட அறிவார்கள் - இந்த அமுல்பபி தெரியாமல் உளறுகிறார்


Sudarsan Ragavendran
செப் 18, 2025 19:17

அவர் அமுல்பேபி அல்ல ....


Apposthalan samlin
செப் 18, 2025 16:32

அவர் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற்று கூச்சல் என்றால் எப்படி ?


M Ramachandran
செப் 18, 2025 15:59

இது வெற்று கூச்சல்லல. இதன் பின்னணியில் நமக்கு வேண்டாத பல சதிகார நாடுகள் முன்னே நிறுத்தியிருப்பது ராகுல்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 18, 2025 15:21

ராகுல் கான ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கு ஒரு கதை உண்டு என்று சொன்னார். ஜகதீப் தன்கர் அமைதியாக இருந்ததற்கு ஒரு கதை உண்டு என்று சொன்னார். ஆனால் இதுவரை இந்த இரண்டு கதைகளையும் அவர் சொல்லவே இல்லை.


ஆரூர் ரங்
செப் 18, 2025 14:58

நம்மைச் சுற்றியுள்ள சிறு நாடுகளில் கலவரம் ஏற்படுத்தி அரசியல் குழப்பத்திற்கு வித்திட்ட பெரியண்ணன் DEEP STATE நாடு இப்போ நம்மையும் வீழ்த்தப் பார்க்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை