உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் மோதல்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிஸ்திவார்: ஜம்மு காஷ்மீரின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.சட்ரூ பகுதியில் உள்ள குட்சல் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை பார்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். பயங்கரவாதிகளை வீழ்த்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஜூலை 03, 2025 04:04

உள்ளூர் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இருக்கமுடியாது. ஆகவே பயங்கரவாத ஆதரவு பயங்கரவாதமாகவே கருதினால் பிரச்சினை தீர்ந்து விடும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2025 23:32

தினமும் குண்டு மழை பொழிந்த காங்கிரஸ் காலம் போன்று இப்போது இல்லையே என்று காஷ்மீர் பயங்கரவாதிகள் கவலைப்படுகிறார்கள். அசம்பாவிதம் செய்யும் முன்னரே, நமது ராணுவவீரர்கள் பயங்கரவாதிகளை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள்.


Ramesh Sargam
ஜூலை 02, 2025 22:32

அடங்க மறு போல நடந்துகொள்கிறார்கள் இந்த பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள். இந்தியா என்ன செய்ய வேண்டும்? வேறென்ன Operation Sindoor Part 2 தான்


முக்கிய வீடியோ