சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சலைட் பலி, இரு ஜவான்கள் காயம்
பிஜப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூரில் இன்று நடந்த என்கவுன்டரில், நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முங்கா கிராமத்தின் வனப்பகுதியில், மாவட்ட ரிசர்வ் போலீஸ் (டிஆர்ஜி) குழு, ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்களுக்கும், நக்சலைட்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் நக்சலைட் ஒருவன் கொல்லப்பட்டான். பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்ட நக்சலைட்டிடம் இருந்து 9 மி.மீ பிஸ்டல், ஐ.இ.டி., வெடிகுண்டுகள் மற்றும் அதனை இயக்கத் தேவையான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.