உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ரூ.7.44 கோடி சொத்து; பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

மாஜி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ரூ.7.44 கோடி சொத்து; பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான சத்யேந்தர் ஜெயினின் ரூ. 7.44 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.கடந்த 2015- 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆம் ஆத்மி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​சத்யேந்தர் ஜெயின் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார்கள் வந்தன.அவர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த ஊழல் வழக்கில் சத்யேந்தர் ஜெயின் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுள்ளார். இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சத்யேந்தர் ஜெயினின் ரூ. 7.44 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.12.25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. டில்லி முன்னாள் அமைச்சர் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
செப் 24, 2025 04:11

7.44 கோடி என்பது திராவிட மதத்தினர் டிபன் சாப்பிட செலவு செய்யும் தொகை.. அன்பானவர்களுக்கு பாலைவனத்தில் ஆடம்பர பங்களா வாங்கிக்கொடுப்பதில் பத்தில் ஒரு பகுதி கூட கிடையாது.


MARUTHU PANDIAR
செப் 23, 2025 20:13

ஒரு சின்ன யூனியன் பிரதேசத்து அமைச்சர் இவ்வளவு அடிச்சா நம்ப ஊர் திரவிடாஸ் அடிக்கற அளவு சரியா தான் டேலி ஆவுதுன்னேன்


M Ramachandran
செப் 23, 2025 20:05

உஹும். 7 88 கோடி பிசாத்து சொத்து. விடியலினிடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். அது விடியலின் ஜஸ்ட் தட் பிசைய காரனுக்கு கொடுக்கும் பிச்சை பணம். இஙகு மலைமுழுங்கி மஹா தேவன்ங்களுக்கு சொற்ப பணம். இங்கு இருப்பவர்கள் விஞ்சான முறையில் அமுக்கியவரின் சீடர்கள் மற்றும் வம்சாவளியினர். இது வரை ரைடு கதை விடும் டில்லியினரின் பாச்ச பலிக்க வில்லையெ.


N Sasikumar Yadhav
செப் 23, 2025 19:50

இதுபோல திராவிட மாடல் கும்பல்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்


சமீபத்திய செய்தி