உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை 2-வது சம்மன்

மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை 2-வது சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்த மோசடி தொடர்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சை திரிணாமுல் காங்., முன்னாள் எம்.பி., மஹூவா மொய்த்ரா இன்று(19-ம் தேதி) அமலாக்கத்துறை முன் ஆஜராகாத நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விசாரணை குழு அறிக்கையின்படி திரிணாமுல் காங்., லோக்சபா எம்.பி.யான மஹூவா மொய்த்ரா கடந்தாண்டு டிசம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது.இந்நிலையில் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பாக மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டில்லி அலுவலகத்திற்கு இன்று (பிப்.19-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த 15-ம் தேதி சம்மன் அனுப்பியது. இதன்படி மஹூவா மொய்த்ரா இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறை எந்த தேதி என குறிப்பிடாமல் அடுத்த வாரம் என குறிப்பிட்டு இரண்டாவது சம்மனை அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ