உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி கைது

தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிஷாவில் தொழிலதிபரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையின் துணை இயக்குநரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.ஒடிஷாவின் தேன்கனல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிகந்த ராவுத். சுரங்கத்தொழில் செய்து வரும் இவர் மீது எழுந்த புகார் காரணமாக, கடந்த மார்ச்சில் விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். இதன்படி, புவனேஸ்வரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ராவுத் நேற்று சென்றார்.அங்கு அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி என்பவர், ராவுத்திடம் விசாரணை நடத்தினார். அப்போது, இந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, 5 கோடி ரூபாய் அளிக்கும்படி சிந்தன் ரகுவன்ஷி கேட்டுள்ளார்.இதுதொடர்பாக பாக்தி என்ற அதிகாரியை சந்திக்கும்படி ரகுவன்ஷி, ராவுத்திடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, ரகுவன்ஷி கேட்ட பணத்தை, உடனே அளிக்கும்படி ராவுத்திற்கு, பாக்தி அழுத்தம் கொடுத்தார்.இவ்வளவு பெரிய தொகையை தர இயலாது என, ராவுத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரகுவன்ஷி, 2 கோடி ரூபாய் அளிக்கும்படி கேட்டுள்ளார்.இதற்கிடையே, லஞ்சமாக பணம் கேட்பதாக ரகுவன்ஷி மீது சி.பி.ஐ.,யில் ராவுத் புகார் அளித்தார். ரகுவன்ஷியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட சி.பி.ஐ., அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை, ராவுத்திடம் அளித்தனர். இதன்படி, முன்பணமாக 20 லட்சம் ரூபாயை ராவுத் அளிக்கும்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் ரகுவன்ஷியை கைது செய்ததுடன், அவருக்கு உதவிய பாக்தி என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மூர்க்கன்
மே 31, 2025 03:15

ஓடாதே டேய் காட்டி கொடுத்துராதே?? இது நமக்கு பழக்கமானதுதான். சொல்லாதே ?? அடிச்சு கூட கேட்பாங்க ? எதையும் சொல்லிறாதே??


சமீபத்திய செய்தி