உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அமலாக்கத்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம், தங்கம், வைர நகைகள் பறிமுதல்

டில்லியில் அமலாக்கத்துறை சோதனை: கட்டுக்கட்டாக பணம், தங்கம், வைர நகைகள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பணமோசடி வழக்கு ஒன்றில் டில்லியில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 5.12 கோடி ரூபாய் ரொக்கம், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெம் டியூன்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கூறிக் கொண்ட இந்தர்ஜித் சிங் யாதவ் என்பவன் மீது கிரிமினல் வழக்குகள்நிலுவையில் உள்ளன.இதனிடையே கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இடையே கடன் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளான். அதன் மூலம் சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்தல், கடன் வாங்கிய தனி நபர்களை மிரட்டுதல், ஆயுதங்களை கொண்டு மிரட்டுதல் மற்றும் பணம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனையடுத்து அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது உபி மற்றும் ஹரியானா மாநில போலீசார் 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கும் அடக்கம்.இதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நேற்று முதல் இந்தர்ஜித் சிங் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில் அவனது கூட்டாளியான அமன் குமார் என்பவனுக்கு சொந்தமான சர்வ்பிரியா விஹார் பகுதியில் உள்ள இடங்களில் நடந்த சோதனையில் 5.12 கோடி ரூபாய், பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 8.80 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட தங்கம் மற்றும் வைர நகைகள் , செக்குகள், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Santhakumar Srinivasalu
டிச 31, 2025 22:54

மிரட்டி இத்தனை சொத்து சேர்க்கிற வரை போலிஸ் என்ன புடிங்ச்சு?


அப்பாவி
டிச 31, 2025 20:22

இதுதாண்டா வளர்ச்சி.. வல்லரசு ஆயாச்சி.


kumarkv
டிச 31, 2025 19:19

யாருமே தமிழ் நாட்டை மீர முடியாது.


Rameshmoorthy
டிச 31, 2025 19:13

These cases to be trailed and finished with in 2 month and realise the money / handed to government treasury


Sudha
டிச 31, 2025 19:00

பணம் பொறுக்கி


Narayanan Muthu
டிச 31, 2025 18:57

இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.


வாய்மையே வெல்லும்
டிச 31, 2025 20:46

எலி எலிகாப்டர் ஓட்டினாலே சம்பவம் இருக்குன்னு திருடர்குல திலகர்களுக்கு சொல்லியா தெரியவேணும் ? அண்ணனே வான்டெட உள்ளவராருன்னா விஷயம் வேரூன்றி இருக்கு போல


Sekar Times
டிச 31, 2025 18:46

Polititians Bureaucrats and their close associates ammased wealth like this criminal.


KRISHNAN R
டிச 31, 2025 18:32

பாருங்க மக்களே தலை நகரம் இது போல தான் நாடு முழுக்க உள்ளனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை