உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புது டில்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா. சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ஹரியானாவில் விதிமுறைகளை மீறி நிலம் வாங்கியது குறித்த வழக்குகளும் உள்ளன.இந்த வழக்குகளில் அவரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், அவரை இன்று 17ம் தேதி டில்லியில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.நிதி முறைகேடுகள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை கையகப்படுத்துதல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தப்பியோடிய ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூன் 17, 2025 04:07

உள்ளே தூக்கிவைத்து விசாரிக்க வேண்டும்.


வேல் முருகன்
ஜூன் 16, 2025 21:42

அக்கா வுக்கு அடுத்த கை பை ரெடி. அடுத்த பார்லிமெண்ட் தொடருக்கு...


Nagarajan D
ஜூன் 16, 2025 21:31

எப்படியும் நம்ம வாய்தா நீதிமன்றம் இடைக்கால தடை கொடுக்கும் பிறகு பெட்டிகளை வாங்கிக்கொண்டு விசாரணையே நடத்தமாட்டானுங்க...


naranam
ஜூன் 16, 2025 20:14

அடித்து இழுத்துக் கொண்டு சென்றால் தான் என்ன? இவர் என்ன ஒரு பெரிய... ?


Ramesh Sargam
ஜூன் 16, 2025 20:01

இதற்கு முன்பு இவர் மீது போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று.


Nagarajan D
ஜூன் 18, 2025 14:15

பெட்டிகள் கைமாறி வழக்கு நீர்த்து போக செய்வாங்க


GMM
ஜூன் 16, 2025 19:57

அமலாக்க துறை அனுப்பும் சம்மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து உடனே வழக்கு தொடுக்கும் வக்கீல் மீது விசாரிக்க யாரும் அதிகாரம் இல்லை என்றால் வழக்கு பதிவு வீண். ஒரு நிர்வாக நடவடிக்கை இறுதி உத்தரவை எதிர்த்து தான் நீதிமன்றம் தீர்வு காண முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை