உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி விமானத்தில் இன்ஜின் கோளாறு

டில்லி விமானத்தில் இன்ஜின் கோளாறு

மும்பை:டில்லியில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தின் இன்ஜினில் நடு வானில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் அவசரகால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், பயணியர் அனைவரும் பத்திரமாக மும்பை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டதாகவும், இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி