உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுச்சூழல் மாசு பிரச்னை: அமைச்சர் கட்கரி புது விளக்கம்

சுற்றுச்சூழல் மாசு பிரச்னை: அமைச்சர் கட்கரி புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பெட்ரோல், டீசல் உள்ளிட்ட படிம எரிபொருட்களுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல், சுற்றுச்சூழல் மாசு பிரச்னையை தீர்க்க முடியாது,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் நேற்று அவர் பேசியதாவது: உயிரி எரிபொருள் பொருளாதாரம் தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் அது நல்ல நிலையில் உள்ளது. நாட்டின் மொத்த காற்று மாசில், 40 சதவீதம் வாகனப் போக்குவரத்தால் ஏற்படுகிறது.காற்று மாசு பெரும் பிரச்னையாக மாறி வரும் சூழலில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்காமல் காற்று மாசை குறைக்க முடியாது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை நாம் நாட வேண்டியுள்ளது.பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிராவில், வைக்கோலில் இருந்து உயிரி இயற்கை எரிவாயு தயாரிக்கும், 400 திட்டங்கள் செயல்படுகின்றன. ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய, பிரதமர் மோடி இலக்குடன் செயல்படுகிறார். இந்தியாவை உலகின் வாகனத்துறை மையமாக மாற்றுவதும் அவரது கனவாகும். இவ்வாறு கட்கரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N DHANDAPANI
நவ 30, 2024 09:38

விஞ்ஞானம் மற்றும் தொழில் வளர்ச்சியின் பின்னோக்குப் பார்வையில் இது உண்மையே ஜப்பான் தன்னுடைய காற்று மாசு பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க பொதுமக்கள் போக்குவரத்துக்கு மின்சார ரயில்களை மட்டுமே நம்பி இருக்கிறது அதேபோல நமது நாட்டிலும் பெருநகரங்களுக்கு அருகில் குறுகிய கால இடைவெளியில் சென்று வரும் சிறு மின்சார ரயில்களை ஈடுபடுத்தி மக்கள் அதனை உபயோகிக்க சாலை வரியை உயர்த்தி நெறிப்படுத்த வேண்டும்


ஆரூர் ரங்
நவ 29, 2024 11:27

அப்பாவிகளே. சாலைகள். அகலமாக்கப்பட்டால் நெரிசல் குறைந்து காற்றுமாசு குறையும். எரி பொருள் தேவையும் குறையும்.


Barakat Ali
நவ 29, 2024 11:04

குறைந்த வட்டியில் வாகனக்கடன் ன்னு கையப்புடிச்சு இழுக்குறாங்கோ .... அதுவும் பொதுத்துறை வங்கிகள் ..... அது மட்டும் சரிங்களா ????


கிஜன்
நவ 29, 2024 08:24

முதல்ல .... கழிவுநீரை ...ஆற்றில் கலப்பதை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் .... புண்ணியமாக போகும் ...


SUBBU,MADURAI
நவ 29, 2024 10:04

அதுவும் உடனடியாக மதுரை வைகை ஆற்றுக்கு அந்த சட்டத்தை கொண்டு வந்து கூவம் ஆற்றைப் போல் மாறி விடாமல் காக்க வேண்டும்.


அப்பாவி
நவ 29, 2024 07:11

அடடே... இதுவரைக்கும் யாருக்கும் தெரியாம இருந்திச்சே. நன்றி ஐயா. அடுத்த 16 வழிச்சாலை எங்கே போடப் போறீங்க?


Thiagu
நவ 29, 2024 08:04

அவன் தான் இவன்


முக்கிய வீடியோ