உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; கூட்டணி குறித்து இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

அமித்ஷாவுடன் மக்கள் பிரச்னைக்காகவே சந்திப்பு; கூட்டணி குறித்து இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

புதுடில்லி: ''மக்கள் பிரச்னைக்காகவே மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அரசியல் எதுவும் பேசவில்லை. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைப்பார்கள். அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கால தாமதம் ஆகி கொண்டு இருக்கிறது. அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல் பல்வேறு திட்டங்களுக்கான நிதிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rmrcy1s3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இருமொழி கொள்கை

கல்வி திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கபட்டு வருகிறது. அதனை தொடர வேண்டும் என்றும், லோக்சபா தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம், இந்த மறுசீரமைப்பை நடத்த வேண்டும் என்றும், கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

மேகதாது அணை

தமிழகம் நீர்ப்பற்றாக்குறை மாநிலமாக இருக்கின்ற காரணத்திலே, தொடர்ந்து தமிழக மக்களுக்கு தேவையான நீர் கிடைப்பதில் சிக்கல் இருந்து கொண்டு இருக்கிறது. நிலையாக தமிழக மக்களுக்கு நீர் கிடைக்கின்ற விதமாக, கோதாவரி-காவிரி நீர் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்டப்படுவதாக செய்தி வெளியாகி கொண்டு இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசு துணை நிற்க கூடாது என்றும், முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதேபோல் தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அதற்கு தேவையான நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.

முறைகேடு

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை முழுமையாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு இருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. போதைப்பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, நாங்கள் கோரிக்கை மனு அளித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: அரசியல் ரீதியாக இரண்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ., இடையே கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது என்பதை நாம ஏற்றுக்கொள்ளலாமா?இதற்கு இ.பி.எஸ்., அளித்த பதில்: நீங்கள் பத்திரிகையில் தான் போட்டு கொண்டு இருக்கிறீர்கள். அப்படி எதுவும் கிடையாது. இப்பொழுது முழுக்க முழுக்க மக்களின் பிரச்னைக்காக தான் வந்து இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு இருக்கிறது. கூட்டணி அமைக்கிறாங்க, இப்பொழுது தான் பேச்சுவார்த்தை நடத்துறாங்க, ஒரு 15 நிமிடம் தனியாக பேசினார்கள் என்று பத்திரிகையில் விறுவிறுப்பான செய்திகள் வெளியிடுவதற்கு ஆகும். முழுக்க, முழுக்க மக்களுடைய பிரச்னையை பேசுவதற்கு தான், நான் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவு எடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம்.நிருபர்: 30 நிமிடங்கள் நீங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறீர்கள்? அரசியல் ரீதியாகவும் பேசி இருப்பீர்கள்? என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த அரசியல் ரீதியாக பேசப்பட்டது குறித்து கொஞ்சம் சொல்லுங்க?இ.பி.எஸ்.,: அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும், மக்களுடைய பிரச்னையை பேசுவதற்கு தான் நாங்கள் அவரை சந்தித்து பேசி இருக்கிறோம். அதுமட்டுமல்ல ஏற்கனவே அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சி அலுவலகத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தோம். அதனை நேற்று நேரடியாக பார்த்தோம். அதன் பிறகு, போதைப்பொருள் விற்பனை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து எடுத்து சொன்னோம். நிருபர்: பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறீர்களா?இ.பி.எஸ்: இல்லை, இருக்கு என்பதற்கு இப்பொழுது தேர்தலா நடக்கிறது. கடந்த தேர்தலின் போது எப்பொழுது கூட்டணி அமைத்தோம். தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைப்பார்கள். அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி வேறு கொள்கை வேறு; எங்கள் கொள்கை எப்போதும் நிலையானது. கூட்டணி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அங்கேயே இருக்கப்போகிறார்களா? அது எல்லாம் கிடையாது. அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலை பொறுத்தே கூட்டணி மாறும். இன்னும் ஒராண்டு இருக்கிறது. உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்று போட்டு கொடுத்து எங்களிடத்தில் வாங்காதீர்கள். எங்களுடைய நிலைப்பாடு இது தான். மக்களின் பிரச்னையை தீர்த்து வைப்பதில் அ.தி.மு,க., முனைப்பாக இருக்கிறது. இவ்வாறு இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

J.Isaac
மார் 26, 2025 17:14

காவல் நிலையத்திற்கு குற்றவாளிகள் கையெழுத்து போட போனது போல் தெரிகிறது


venugopal s
மார் 26, 2025 16:45

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறாரா இ பி எஸ்?


தமிழன்
மார் 26, 2025 15:45

தலைப்புல இருந்தத என் 8வது படிக்கும் பையன்கிட்ட சொன்னேன் விழுந்து விழுந்து வயிறு வலிக்க சிரித்தான் அவன் இப்படி சிரித்ததை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை


ulaganathan murugesan
மார் 26, 2025 15:30

அதாவது நாங்கள் கூட்டணி பத்தி பேசலை. மக்கள் பிரச்சினை மட்டுமே பேசினோம். பச்சை பொய் பழனிசாமி நாங்க நம்பிட்டோம்.


P. SRINIVASAN
மார் 26, 2025 15:25

நாங்க நம்பிட்டோம். இவருக்கு ரொம்ப அக்கறை தமிழ்நாட்டு மக்கள் மீது. இந்த அடிமைக்கு வேற வழியில்லை.. பிஜேபி அண்ணாதிமுகவை அழிக்கும்வரை ஓயாது.


ராமகிருஷ்ணன்
மார் 26, 2025 14:36

தோல்வி பயத்தில் திமுக ஊபிஸ்களின் கதறல் தொடங்கி விட்டது. சுத்தமா வாஸ் அவுட் ஆவது உறுதி. 1 ஓட்டுக்காக 10000 கொடுத்தாலும் தோல்வி உறுதி


ulaganathan murugesan
மார் 26, 2025 20:36

நீங்க முதலில் நோட்டாவை தாண்டுங்க


TRE
மார் 26, 2025 14:30

பொய்ச்சொல்லக்கூடாது EPS நாம எப்போ மக்கள் பிரச்சனை பத்தி பேசி இருக்கோம் கூட்டணி வைக்கலேனா ED ரெய்டு வரும்னு அமித்ஷா மிரட்டி இருப்பார் மைக் முன்னாடி வந்து மக்கள் கிட்ட பொய் சொல்லக்கூடாது. இப்பதான் ED ரெய்டு விட்டு துரைமுருகனும் செந்தில் பாலாஜியும் ....வந்தாங்க


தஞ்சை மன்னர்
மார் 26, 2025 14:28

என்ன இ.பி.எஸ் இப்படி சொல்லிபுட்டிங்க


தஞ்சை மன்னர்
மார் 27, 2025 10:47

உண்மை உறைக்குதோ


GMM
மார் 26, 2025 14:18

திமுகவினால் மக்களுக்கு பிரச்னை. ஆளும் கட்சியிடம் முறையிட முடியாது. ஆகவே மத்திய அரசு மந்திரி சந்திப்பு. கூட்டணி குறித்தும் பேச்சு இருக்க வேண்டும். தமிழகம் திமுகவின் கீழ் இருப்பது போல் தெரியவில்லை. அமைச்சர்கள், திமுகவினர், சாதி, கட்சி அதிகாரிகள் , நீதிபதிகள் இஷ்டம் போல் செயல்படுவது ஆபத்து? . ஜனநாயக முறையில் எதிர் கொள்ள வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயம். பழனிச்சாமி பிறழ வேண்டாம்.


J.Isaac
மார் 26, 2025 14:14

பச்சோந்தி கூட்டம். இவர்களை நம்பி நிச்சயமாக மக்கள் இவர்களுக்கு ஓட்டு போடமாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை