உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிதாக துவங்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு வேரோடு அழிப்பு!

புதிதாக துவங்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு வேரோடு அழிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்ததை அடுத்து, போலீசார் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிதாக துவங்கப்பட்ட பயங்கரவாத அமைப்பை கண்டுபிடித்த அவர்கள், அதை அடியோடு அழித்தனர்.

தொடர் கதை

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும், அவர்களுக்கு நம் பாதுகாப்புப் படை பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் புதிய அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர், கந்தர்பால், பந்திபோரா, குல்காம், புத்காம், அனந்த்நாக், புல்வாமா ஆகிய மாவட்டங்களில், ஜம்மு - காஷ்மீர் காவல் துறையின் உளவுத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, 'தெஹ்ரீக் லாபிக் யா முஸ்லிம்' என்ற பயங்கரவாத அமைப்பு புதிதாக துவங்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அந்த அமைப்பின் நடவடிக்கைகளை முடக்கிய உளவுத் துறை அதிகாரிகள், அதை வேரோடு அழித்தனர்.இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீநகர், கந்தர்பால், பந்திபோரா உள்ளிட்ட மாவட்டங்களில், புதிய பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இந்த மாவட்டங்களில் நேற்று சோதனை நடத்தினோம்.

முற்றிலும் முடக்கம்

அப்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாக, தெஹ்ரீக் லாபிக் யா முஸ்லீம் என்ற அமைப்பு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்ட அமைப்பாக இருந்தாலும், பயங்கரவாத நடவடிக்கையில் இளைஞர்களை அதிகளவில் சேர்த்துள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்த பாபா ஹமாஸ் என்பவர் இந்த அமைப்பை நிர்வகித்துள்ளார். இவர், எல்லை தாண்டிய ஊடுருவல், நிதி அளித்தல், அமைப்புக்கு ஆட்சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு வேரோடு அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

shakti
அக் 23, 2024 14:37

இந்திய படைகளின் துப்பாக்கி குண்டில் பன்றி இறைச்சி கொழுப்பு தடவி சுடுங்கள் ... தீவிரவாதம் தானாக நின்றுவிடும்


sridhar
அக் 23, 2024 12:00

ஐடியா இல்லாத தீவிரவாதிங்க … காஷ்மீரை விட பாதுகாப்பான இடம் இங்கே இருக்குன்னு தெரியாதவங்க .


சாண்டில்யன்
அக் 23, 2024 10:04

பாகிஸ்தானைச் சேர்ந்த பாபா ஹமாஸ் என்பவர் பத்திரமா இருக்காரான்னு போட்ருங்க இஸ்ரேல்காரன் குறிவைத்து அடிக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லையே


HoneyBee
அக் 23, 2024 08:46

கணக்கு வந்து என்ன செய்ய போகிறாய். ஏன் நிவாரணம் கொடுக்க போறியா


Kalyanaraman
அக் 23, 2024 08:24

இஸ்ரேலின் பேஜர் தாக்குதலைப் போல, பயங்கரவாதிகளை அழிக்க புதிதாக யோசிக்க வேண்டும். எல்லா பயங்கரவாத அமைப்பிற்கும் ஆணிவேராக பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தான் அழியும் வரை வேர் அழிந்தது என்பது என்ற ஒன்று இல்லை.


R SRINIVASAN
அக் 23, 2024 08:24

இண்டிகோ விமானத்திற்கு அடிக்கடி அச்சுறுத்தல் வருகிறதாம் . இதனால் விமான சேவை பாதிக்கப்படுகிறதாம் .இதைத்தடுக்க வழிகள் இதோ 1. நாட்டில் வேலையில்லாமல் எவ்வளவோ பேர் வேலையில்லாமல் தவறான வழியில் ஈடுபடுகிறார்கள்.அவர்களை வைத்து இன்டெலிஜென்ஸ் படையை உருவாக்கலாம் .2. விமான நிலையத்தின் நுழை வாயில் வழியாக உள்ளே வரும்போதே பயணிகளை சோதனை செய்தல் உண்மை வெளி வரலாம் .டாக்ஸியிலோ அல்லது வேறு வாகனத்திலோ வந்து இறங்கும்போதோ அவர்களை சோதனை செய்யலாம் .


raja
அக் 23, 2024 08:03

வேர் யாரு கிளைகள் யாரு அடியோடு அளித்திருந்தார் எத்தினி பெரு செத்தானுவோ ஒரு புண்ணாக்கும் வெளியில வரலையே...


சாண்டில்யன்
அக் 23, 2024 11:24

புண்ணாக்கு என்று சொன்னால் போதுமா புண்ணாக்கு வடிகட்டின புண்ணாக்கு OIL CAKE / DE OILED CAKE என்று இரண்டு வகை உண்டு இதில் எந்தவகை


பேசும் தமிழன்
அக் 23, 2024 07:33

எத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் .....அதை பற்றி எதுவும் சொல்லாமல் ....எப்படி வேரோடு அழிக்க முடியும் ??


Narayanan Sa
அக் 23, 2024 07:19

செயல் பாடுகளை அழித்தால் போதாது அந்த தீவிர வாதிகளை தூக்கில் இட வேண்டும்


RAJ
அக் 23, 2024 06:47

ஓமர் அப்துல்லா குடும்பம் இருக்கும் வரை ஜம்மு காஷ்மீருக்கு அமைதி கிடைக்காது. நேரு மாமா குடும்பம் உள்ளவரை இந்திய வல்லரசு 1 ஆக முடியாது. ..துரோகிகளை கூடவே வச்சுக்கிட்டு எப்படி முன்னேறுவது?? அமைதியை கொண்டு வருவது??? ..


சமீபத்திய செய்தி