உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - ரஷ்யா உறவை நாங்கள் விரும்பவில்லை; ஐரோப்பிய யூனியன்

இந்தியா - ரஷ்யா உறவை நாங்கள் விரும்பவில்லை; ஐரோப்பிய யூனியன்

புதுடில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் காரணமாக, இந்தியா, ரஷ்யா பக்கம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்று ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பேச்சு, கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்தது. ஒரு சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து ஏற்படாததை அடுத்து, 2013ல் இந்த பேச்சு நிறுத்தப்பட்டது. பின், கடந்த 2022 ஜூனில் மீண்டும் துவங்கியது. இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் விதமாக, இந்தியா மற்றும் சீனாவுக்கு 100 சதவீத வரியை விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி 7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த சூழலில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் கூறியதாவது; இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து இல்லை. இது இருதரப்புக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்புக்கு தடைகளாக உள்ளன. ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரையில் இந்தியா நம்பிக்கைக்குரிய நாடாக இருக்கிறது. இந்த தடைகள் காரணமாக, இந்தியா, ரஷ்யா பக்கம் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. இந்த வெற்றிடத்தை வேறு யாராவது நிரப்புவார்கள் என்று விட்டு விடுவதா? அல்லது அதை நாமே நிரப்ப முயற்சிப்பதா? என்பதே கேள்வியாக உள்ளது, எனக் கூறினார். முன்னதாக, ஐரோப்பிய யூனியன் இன்று வெளியிட்ட ஆவணத்தில், ரஷ்யாவின் ராணுவத்தைக் குறைப்பது மற்றும் ஐரோப்பிய யூனியன் தடைகளைத் தவிர்ப்பதைத் தடுப்பது குறித்து இந்தியாவுடன் மேலும் இணைந்து செயல்படும் என தெரிவித்திருந்தது. இந்தியா - ரஷ்யா இடையிலான உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muthukumarasamy
செப் 19, 2025 18:52

Nobody should dictate others for business and internal security matters.


Chandhra Mouleeswaran MK
செப் 17, 2025 22:21

""தடையற்ற வர்த்தகக் கொள்கை, உண்மையில், தடையற்ற சுரண்டல் கொள்கை"" ஆயுதங்களைத் தவிர உங்களிடம் என்னம்மா இருக்கிறது? நீங்கள், காலனிகள் இல்லாததால்ம் கிட்டத் தட்டப் பிச்சைக் காரங்கள் ஆகியாயிற்று ரஷ்யாவும் நாங்களும் சேர்ந்து பிச்சை போட்டால் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா என்ன?


Chandhra Mouleeswaran MK
செப் 17, 2025 22:17

மற்ற நாடுகளைச் சுரண்டியே வயிறு வளர்த்த திருட்டுத் துரைமார் இந்த ஐரோப்பிய யூனியன் பாரத இரஷ்ய உறவை விரும்பாவிட்டால் போங்க அந்தப் பக்கமாக்த் திரும்பி உட்கார்ந்து கொள்ளுங்க உங்களுடைய அமேரிக்க சாம்பு மாமாவைப் போய்க் கட்டிக்கொள்ளுங்கள்


V Subramanian
செப் 17, 2025 20:42

India also does not want EU and Pakistans friendship. But we are advising EU on this. The EU thinks the world is still in colonial rule.


முக்கிய வீடியோ