உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை வக்ப் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை அரசால் கைப்பற்ற முடியும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதை சுட்டிக் காட்டிய மத்திய அரசு, அரசு நிலத்தை உரிமை கோர யாருக்கும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளது.வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முதல் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது; அரசு நிலத்தை உரிமை கோர யாருக்கும் உரிமை கிடையாது. அரசுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை வக்ப் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை அரசு கைப்பற்ற முடியும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. வக்ப் என்பது தர்மம் தானே தவிர, இஸ்லாத்தின் ஒரு இன்றியமையாத பகுதியில்லை. இந்து, கிறிஸ்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களிலும் தர்மம் என்ற ஒரு பகுதி உள்ளது. அரசு கொண்டு வந்த இந்த வக்ப் சட்டத் திருத்தம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கூட்டு பார்லிமென்ட் குழு 36 அமர்வுகளில் இது குறித்து விவாதித்துள்ளன, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தத்வமசி
மே 21, 2025 22:51

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்துக்களுக்காக முன்னே வராத காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள், முஸ்லிம்களின் வக்ப் சொத்துக்காக ஏன் பரிந்து ஓடி வருகிறார்கள் ? ஒன்று அந்த சொத்துக்களை இவர்கள் ஆட்டைய போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றது ஒட்டு வங்கி அரசியல். இதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனியாவது இந்த கட்சிகளை நம்பாதீர்கள்.


GMM
மே 21, 2025 20:19

அரசு நிலம் வக்பு நிலம் மற்றும் பிற மத, சாதி அமைப்பு நிலம் என்று ஆளும் கட்சிகள் அரசியல் காரணங்களுக்கு அரசு அதிகாரிகளை மிரட்டி, கெஞ்சி, ஏமாற்றி மாற்றப்பட்டு இருந்தால், அது எப்போதும் மீட்புக்கு உட்பட்டது. அரசு நிலம் எப்போதும் தனி நபர், அமைப்பிற்கு செல்லாது. அரசு நிலம் பொது நல உபயோகத்திற்கு மட்டும் தான் பயன் படுத்த முடியும்.


மீனவ நண்பன்
மே 21, 2025 19:58

இங்கிலாந்தில் பலவகைப்பட்ட கிறிஸ்துவ சர்ச்கள் நிறைய . எந்த சர்ச்சும் எங்கள் அமைப்பு தான் உயர்ந்தது என்று அதிகாரத்தை கையில் எடுக்க கூடாது என்பதற்காக செக்குலர் என்ற வார்த்தை நுழைந்தது .இந்திய அரசியல் சாசனத்தில் செக்குலர் என்று எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா ?


Rathna
மே 21, 2025 21:05

இல்லை. எமெர்ஜன்சியின் போது நுழைக்கப்பட்டது.


Rathna
மே 21, 2025 19:33

ஒரு செகுலர் நாட்டில் எப்படி ஒரு மதம் சார்ந்த அமைப்பு, அரசாங்க நிலத்தை கைப்பற்ற அனுமதிக்கலாம்?


ஆரூர் ரங்
மே 21, 2025 17:59

ஸ்ரீ பெரும்புதூர் ராஜிவ் நினைவிடம் கூட ஆலயத்தினிடம் இருந்த இடம்தான். மிகக் குறைந்த விலைக்கு அரசால்( கட்டாயப்படுத்தி) கையகப்படுத்தபட்ட நிலம்.


மீனவ நண்பன்
மே 21, 2025 22:15

மெரினா சமாதிகள் பூர்வீகம் என்ன ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை