உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்

முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்

புதுடில்லி: 'முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பெண்ணுக்கு உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தன் இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவருக்கு, மாதம், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 2017ல் ரத்து செய்தது.இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:இந்தப் பெண்ணுக்கு, ஹைதராபாதில், 1999ல் முதல் திருமணம் நடந்துள்ளது. அதற்கடுத்த ஆண்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து, 2005ல் நாடு திரும்பிய பின், கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.அதே, 2005ல் தன் வீட்டுக்கு அருகில் உள்ளவரை, அந்தப் பெண் திருமணம் செய்துள்ளார். ஆனால், இது தொடர்பாக, ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.அதற்கடுத்த ஆண்டில், இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு, 2008ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து, 2012ல் விவாகரத்து கோரியுள்ளனர்.தன் மனைவிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம், இரண்டாவது கணவருக்கு தெரியும். அதனால், மோசடி செய்ததாக கூற முடியாது. அதுபோல, தன் முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் எதையும் இந்தப் பெண் பெறவில்லை.தன் முதல் கணவருடன் ஒப்பந்தம் செய்தாலும், சட்டப்பூர்வமாக அதை ரத்து செய்யவில்லை. முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறாததால், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கு அந்தப் பெண் ணுக்கு உரிமை உள்ளது.ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவுகளில், ஜீவனாம்சம் என்பது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் நிவாரணம் அல்ல. கணவருக்கான சட்டப்பூர்வமான மற்றும் தார்மீக கடமையாகும். அந்த வகையில், இரண்டாவது கணவர், ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sivaraman Krishnamurthy
பிப் 06, 2025 12:32

இது ஒரு கேவலமான தீர்ப்பு. முதல் திருமணத்தில் விவகாரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்வது குற்றம். அதன்பின் எப்படி முதல் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியும்?? இந்த நாடு மனிதம் என்ற போர்வையில் கலாச்சார அழிவை நோக்கி செல்கிறது.. அதற்கு நீதான்றங்களும் துணை போவது ஒரு வருத்தப்படவேண்டிய விஷயம்.


அப்பாவி
பிப் 06, 2025 11:26

இதையும் யூனிஃபார்ம் சிவில்.கோட் ல சேர்க்கணும். ஒரு நாலஞ்சு கலியாணம்.பண்ணி டைவர் ஆயி ஜீவனாம்சம் வாங்கிட்டா செட்டில் ஆயிடலாம்.


ஆரூர் ரங்
பிப் 06, 2025 10:48

இநத ஜீவனாம்ச.பணத்தை வைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொள்ளலாம். அல்லது குறிபிட்ட காலத்துக்கு ஒப்பந்த வாழ்க்கை நடத்தலாம். சொரியார் காட்டிய வழியை மறக்க வேண்டாம்.


sankaran
பிப் 06, 2025 09:34

இனிமேல் கல்யாணம் வேண்டாம் ... பிள்ளை பெற வேண்டாம் ... இப்படியே போனால் காலம் காலமாக கட்டி வந்த குடும்ப வாழ்கை அழிந்து விடும் ... ஏற்கனவே பாதி போய் விட்டது ... இந்த கோர்ட்டும் நீதிபதிகளும் சேர்ந்து மிச்ச மீதியையும் அழித்து விடுவார்கள் ...


visu
பிப் 06, 2025 08:53

முதல் கணவரிடம் ஒப்பந்தம் மட்டும் போட்டுவிட்டு முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்தது குற்றமில்லையா ? இரண்டாம் கணவருக்கு தெரியும் என்றாலும் அது குற்றமே 2 ஆம் திருமணம் சட்டப்படி செல்லாதே .இப்படி விவாகரத்து விண்ணப்பித்துவிட்டு எத்தனை பேர் மறுமணம் செய்ய காத்து கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு இந்த தீர்ப்பை ஒரு உதாரணமா எடுத்துக்கலாமா


M S RAGHUNATHAN
பிப் 06, 2025 08:42

இந்தப் பெண்ணின் passport இல் கணவர் பெயர் என்ன ? முதல் கணவர் பெயர் நீக்கப் பட்டதா ? ஒரு பதிவு செய்யப்பட்ட திருமணத்தை எப்படி ஒரு ஒப்பந்தத்தின் மூலம் ரத்து செய்யமுடியும். இந்த பெண் செய்தது Adultery. அதற்கான தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். முதல் கணவரை சட்ட பூர்வமாக விவாக ரத்து செய்யாததால் நாளை முதல் கணவரின் சொத்துகள் மீதும் உரிமை கொண்டாட முடியும். இப்போது வரும் தீர்ப்புகள் வேடிக்கை விநோதமாக நீதிபதிகளின் சொந்த கருத்தாக இருக்கிறது. They are not compatible with letter and spirit of the Law.


பேசும் தமிழன்
பிப் 06, 2025 08:07

அப்போ முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்ததது தவறு இல்லையா.... அதற்க்காக அந்த பெண்ணுக்கு தண்டனை கிடையாதா ???


அப்பாவி
பிப் 06, 2025 07:51

டபிள் ஜீவனாம்சம்.


Kanns
பிப் 06, 2025 07:29

Sack& Punish All Gravely Vested-Selfish CaseHungry Judges Gender Biasedly Misinterpreting& Misusing Peoples Law. No Mercy Required against Dreaded AntiSociety Conspirator Criminals


GMM
பிப் 06, 2025 07:04

மறு மணம் புரியாத இந்து பெண்ணுக்கு ஜீவனாம்சம். இரண்டாவது கணவர் என்றால் பெண் சமூக, அரசு விதிகளை மதிக்க விரும்பவில்லை. உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு சட்ட ஆலோசனை செய்யும் துறை . அரசு அனுமதி பெறாமல் இது போன்ற கட்டப்பஞ்சாயத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசியல் சாசனம் பதவிகளை சர்வ சாதாரணமாக கட்டுப்படுத்தி உத்தரவிட்டு வருகிறது. நீதிபதிகளுக்கு தனி அதிகாரம் மக்கள் மீது செலுத்த மட்டும் தான். கவர்னர் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்பு மீது செலுத்த முடியாது. மத்திய அரசின் மௌனம் நாடு முழுவதும் நிர்வாக சிக்கல் உருவாக்கும்.