உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்டிகையானாலும் செய்யும் தொழிலே முக்கியம்; சுந்தர் பிச்சையின் சுவாரஸ்ய தீபாவளி பதிவு

பண்டிகையானாலும் செய்யும் தொழிலே முக்கியம்; சுந்தர் பிச்சையின் சுவாரஸ்ய தீபாவளி பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், புத்தாடை அணிந்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து சமூகவலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.அதில் கூகிள் லோகோவை சுவையான இனிப்பு பர்பியால் வரைந்திருக்கிறார்.சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பர்பிகள் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என வெவ்வேறு வண்ணங்களில் உள்ளன. அவை கூகுள் லோகோவைப் போலவே அமைக்கப்பட்டு இருக்கின்றன. படத்தில் ரங்கோலி, பூக்கள் மற்றும் ஒரு தட்டு லட்டுகளும் இடம்பெற்றுள்ளன.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:என் வீட்டில் பர்பி பரிமாற ஒரே வழி இதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது.அனைவருக்கும் ஒளி, மகிழ்ச்சி மற்றும் உங்களுக்குப் பிடித்த பண்டிகை விருந்துகள் (கூகுள் கருப்பொருள் அல்லது வேறு) நிறைந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.இந்தப் பதிவு, சமூக ஊடக பயனர்களின் கவனத்தை விரைவாகப் பெற்று வருகிறது. சுந்தர் பிச்சைக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறி பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பண்டிகையானாலும் செய்யும் தொழிலே முக்கியம் என்று சுந்தர் பிச்சையின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை