உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

புதுடில்லி: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாகவும், இது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தவிர அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். இது தொடர்பாக பார்லி., வளாகத்தின் வெளியே நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:''இந்தியாவில் பா.ஜ., அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. இந்திய வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறை மத்திய அரசால் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவருக்கு மட்டும் தெரியவில்லை. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது'' என்றார்.இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் விமர்சனம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ; 'ஆம் டிரம்ப் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவர் உண்மையை சொல்லி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் செயல்படுத்தப்படுகிறது. ஒரு புறம் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை விமர்சிக்கிறது. மறுபுறம் சீனா உங்களை மிரட்டுகிறது. ஆனால் இந்திய வெளியுறவு துறை கொள்கை சிறப்பாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். உலகம் முழுவதும் எம்பிக்கள் குழுவை அனுப்பினீர்களே எந்த நாடாவது பாகிஸ்தானை கண்டித்ததா ? இந்த நாட்டை எப்படி நடத்தி செல்வது என்று ஆளும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Raghavan
ஜூலை 31, 2025 22:03

லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் பொருளாதாரம் படித்து அதில் Phd பட்டம் வாங்கியவர். இவன் உலக பொருளாதாரத்தைப்பற்றி எல்லாம் படித்து கரைத்துக்குடித்தவர். தினம் ஏதேனும் சொல்லி வாங்கிக்காமல் இருந்தால் இவருக்கு தூக்கம் வராதுபோல.


Ramesh Sargam
ஜூலை 31, 2025 20:51

பொருளாதார நிபுணர், பொருளாதாரத்தில் நோபல்பரிசு வென்றவர் ராகுல் சொல்லிட்டார், இறந்த நிலையில் இந்திய பொருளாதாரமாம். சும்மா போவீரா?


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 20:49

கடந்த ஐந்தாண்டில், இந்தியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு ஏறிவிட்டது. இந்தியா மூன்றாவது பெரிய பணக்கார பொருளாதார நாடாகிவிட்டது. இருந்தும் ராகுல் பொய் தகவல்களை பரப்பி வருகிறார். ட்ரம்பின் 25% புதிய வரியை இந்தியா பொருட்படுத்தவில்லை. காரணம் இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியும் செழுமையும் தான். இந்தியாவின் பொருளாதார வலிமையை உலகிற்கு காட்டவேண்டிய தருணம் வந்துவிட்டது.


Rajasekar Jayaraman
ஜூலை 31, 2025 20:30

ஜனநாயக கொலைகாரன் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட குள்ளநரித்தனம்.


M Ramachandran
ஜூலை 31, 2025 19:51

சொல் அம்பலம் ஏறாது.


Rajasekar Jayaraman
ஜூலை 31, 2025 20:34

கொள்ளையன் சொல்லும் சொல் ஏற்புடையது இல்லை அமெரிக்க பப்பு சொல்வதை இப்போ சொல்கிறார் முன்பு சோரஸ் சொன்னதை சொல்லி வந்தார்.


Sivagiri
ஜூலை 31, 2025 19:01

காங்கிரஸ் கம்பெனிதான் இந்தியா-ன்னு , முடிவு பண்ணீட்டாரு போல . . .


Bhakt
ஜூலை 31, 2025 18:58

உனக்கென்னப்பா நீ என்ன வேணும்னாலும் பேசலாம்.


Prasath
ஜூலை 31, 2025 18:54

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் ராவுளு இவரின் தொடர்பு நாடான பாகிஸ்தானை நினைத்து புலம்புகிறார் இந்தியா இதற்கு பதில் சொல்ல தேவை இல்லை


பேசும் தமிழன்
ஜூலை 31, 2025 18:47

இருக்கவே இருக்கிறது உங்கள் அபிமான பாகிஸ்தான் நாடு.... அங்கே போய் செட்டிலாகி விடலாம்..... அங்கே உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது.... ஆனால் இந்தியாவில்.... வாய்பில்லை ராஜா.... வாய்ப்பே இல்லை !!!


Mecca Shivan
ஜூலை 31, 2025 18:47

ecnomics க்கு ஸ்பெல்லிங் தெரியுமா இவருக்கு ?


புதிய வீடியோ