உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரிகுறைப்பை வரவேற்கிறோம்; ஆனால்... ஜிஎஸ்டி குறைப்பு குறித்து ப.சிதம்பரம் கருத்து

வரிகுறைப்பை வரவேற்கிறோம்; ஆனால்... ஜிஎஸ்டி குறைப்பு குறித்து ப.சிதம்பரம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாமானிய மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலைக்கான வரி விகிதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உப்பு முதல் கார் வரை பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2qit829d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல, விவசாயிகளும், விவாசயத் துறையும் பயன்பெறுவர். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்; சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாகிவிட்டது. தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நிலவும் விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை. இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது என்பதை யூகிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் குடும்பக் கடனா? குறையும் குடும்ப சேமிப்புகளா? பீஹார் தேர்தலா? டிரம்ப் மற்றும் அவரது வரி விதிப்புகளா? மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

சூரியா
செப் 04, 2025 18:52

பாக்கிஸ்தான்காரன் நமது ரூபாய் நோட்டுக்களைக் கள்ள நோட்டு அடிக்க உதவியவர். இவர் நமது பொருளாதாரம் பற்றி பேச வந்துவிட்டார்!


VENKATASUBRAMANIAN
செப் 04, 2025 18:38

அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள். இது உங்கள் ஸ்டாலின் கூறியது.


என்றும் இந்தியன்
செப் 04, 2025 17:51

பசி யின் கருத்து இப்படி உள்ளது நீ வெளியே போட்ட உடை நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் உள்ளே போட்டுள்ள உள்ளாடை எவ்வளவு விலை உயர்ந்தது???எவ்வளவு நாட்களாக இதை சொல்லியும் கேட்காமல் இப்போ வெளியே உடை போட்டது வியப்பாக இருக்கின்றது


viswasam
செப் 04, 2025 17:40

தேர்தலுக்காக ஒன்றிய அரசு இந்த காரியத்தை செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது பாலிடிக்ஸ் பன்றாங்கலம் பாலிடிக்ஸ்


MUTHU
செப் 04, 2025 18:54

தேர்தல் என்றைக்கு வருது.


shyamnats
செப் 05, 2025 08:16

பொது மக்கள்ல ஒருத்தனான உனக்கும் சேர்த்து நன்மை பயக்கும் சட்டம் இது. கட்சிகளுக்கு விசுவாசியாக இருக்கலாம். ஆனால் இப்படி கொத்தடிமையாக, எது நன்மை, தீமை என்று உணராமல் இருக்க கூடாது.


ஆசாமி
செப் 05, 2025 10:21

இந்நியாவில்்ஏதோ மூலையில் ஏதாவது தேர்தல் நடந்துட்டேதான் இருக்கும்.


surya krishna
செப் 04, 2025 16:48

உன்கிட்ட யாரு கருத்து கேட்டா. சோனியாவின் கொத்தடிமை.


surya krishna
செப் 04, 2025 16:41

யுபிஐ எல்லாம் நடைமுறைக்கு வராது சொன்னது நீதானே. நீ எல்லாம் பேச என்ன தகுதி இருக்கு. உன்கிட்ட யாராவது கருத்து கேட்டீங்களா..... இந்திய பொருளாதாரத்தை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆள்.


shyamnats
செப் 04, 2025 16:22

இவர் இன்னும் பெயில்லதான இருக்கிறார்? நிரபராதி என்று தீர்வாகவில்லையே ?


Anand
செப் 04, 2025 16:19

இன்னும் இருக்கானா?


கூத்தாடி வாக்கியம்
செப் 04, 2025 15:24

நீ இருந்தா கிழிச்சு தொங்க விட்டிருப்ப


lana
செப் 04, 2025 14:55

தண்ணீர் க்கு சோறு bun க்கு gst இல் வரி என்று ஒரு அறிவுஜீவி. ஆனால் இதற்கு முன்பு இருந்த VAT வரி இல் இதற்கு வரி இருந்தது. அவ்வளவு அக்கறை எனில் தமிழக அரசு அதன் பங்கு ஆன TNGST வரி ஐ குறைக்க லாமே. முதலில் gst மாநில அரசுகள் வசூல் செய்கிறார்கள் என்ற உண்மை எத்தனை உ.பி க்கு தெரியும். வணிகவரித்துறை என்ற ஒரு துறை தான் gst வசூலிக்கிறார்கள்.