உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியோருக்கான பிரத்யேக செயலி துவக்கம்

முதியோருக்கான பிரத்யேக செயலி துவக்கம்

சிவில் லைன்ஸ்:மூத்த குடிமக்களுக்கான சேவையை மேம்படுத்துவதற்காக குடும்ப Kutumb என்ற மொபைல் செயலியை துணைநிலை கவர்னர் துவக்கி வைத்தார்.சர்வதேச முதியோர் தினத்தையொட்டி இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக பதிவு செய்யப்படும் மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த செயலி வாயிலாக இதுவரை 65,000 மூத்த குடிமக்களை டில்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவை டில்லி காவல்துறையின் முதன்மைப் பொறுப்புகளில் ஒன்று என காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செயலியானது, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கும் உதவுவதற்கான முயற்சியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை