உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்: பா.ஜ., காங்.,க்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்: பா.ஜ., காங்.,க்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தங்களது கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து, கூடுதல் கவனம் செலுத்துவதுடன், நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி, பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.மதம், மொழி, ஜாதி ரீதியாக பிரசாரம் செய்வதாக பா.ஜ.,வும் காங்கிரசும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wqkxqy2a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பாஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது: இரு கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் கட்டுப்பாட்டை கடைபிடித்து, கூடுதல் கவனத்துடன் நாகரீகமாக பேச வேண்டும். மதம் மற்றும் ஜாதி ரீதியாக பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பிரசாரம் செய்வதை பா.ஜ., நிறுத்த வேண்டும்.அரசியலமைப்பு நீக்கப்படும் என தவறாக பொருள்படும்படி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி நட்சத்திர பேச்சாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு படை விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது. பாதுகாப்பு படையினரின் சமூக பொருளாதார கூட்டமைப்பு தொடர்பாக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
மே 22, 2024 19:30

தேர்தல் முடிகிற சமயத்தில் என்ன கட்டுப்பாடு வேண்டியுள்ளது? தேர்தல் கமிஷனரின் வேலை ஜூன் நாலாம் தேதி மோடி நானூற்றி ஐம்பது தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் என்று சொல்லவேண்டியது மட்டும் தான்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை