வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிஸ்ரா, ஜிதேந்திரா, படேல் இவர்களுடைய புகைப்படங்கள் கிடைக்க வில்லயோ ? ?செய்தியில் போட்டிருந்தால் அவர்களுக்கு மரியாதை கொடுத்த மாதிரி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பயிற்சியின் போது, டாங்கரில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் வழக்கம் போல, ராணுவ வீரர்கள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாங்கியில் பயிற்சி மேற்கொண்டிருந்த வீரர்கள், அதில் வெடிமருந்துகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஷிதோஷ் மிஸ்ரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த ராணுவ வீரர் ஹெலிகாப்டர் மூலம் சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் சூரத்கர் ராணுவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.,15) இதே மையத்தில் துப்பாக்கிகளை இழுத்துச் செல்லும் வாகனத்தில் துப்பாக்கியை இணைத்த போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் சந்திர பிரகாஷ் படேல் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த இரு தினங்களில் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அனைவரிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ்ரா, ஜிதேந்திரா, படேல் இவர்களுடைய புகைப்படங்கள் கிடைக்க வில்லயோ ? ?செய்தியில் போட்டிருந்தால் அவர்களுக்கு மரியாதை கொடுத்த மாதிரி