உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்மை கண்டறியும் குழுவா; அதெல்லாம் செல்லாது: அடித்து நொறுக்கியது ஐகோர்ட்

உண்மை கண்டறியும் குழுவா; அதெல்லாம் செல்லாது: அடித்து நொறுக்கியது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'உண்மை அறியும் குழு அமைக்க ஏதுவாக மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம், சட்டவிரோதமானது'', என மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில், சமூக வலைதளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் துறைகள் குறித்து பரவும் பொய் செய்திகள் குறித்து ஆராய உண்மை கண்டறியும் குழு அமைக்க வழி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரஸ் இன்பர்மேஷன் பிரோ அமைப்பின் கீழ் உண்மை கண்டறியும் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு, சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாகும்போது, அவற்றை பொய் எனக்கருதினால், அதை குறிப்பிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி மாதம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ஒரு நீதிபதி சட்டதிருத்தம் செல்லும் எனவும், மற்றொரு நீதிபதி செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து, இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.விசாரித்த நீதிபதி இன்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: பொய் செய்திகளை கண்டறிய, உண்மை அறியும் குழுவை அமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த சட்டத்திருத்தமானது, அரசியல் சாசனத்தின் பிரிவு 14, 19(1) (ஏ) மற்றும் 19(1)(ஜி) ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இதன் மூலம் மத்திய அரசின் சட்டத்திருத்தம் செல்லாததாகிவிட்டது.

தமிழகத்திலும்

தமிழகத்திலும், அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மாநில அரசு உண்மை அறியும் குழுவை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 21, 2024 04:46

புள்ளி வாய்த்த இண்டி கூட்டணி ஆதரவு ஊடகங்களை பரப்பும் பொய் செய்திகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று கணம் நீதிபதிகள் சொல்லவேண்டும்.


Nandakumar Naidu.
செப் 21, 2024 00:03

அந்த ஜட்ஜ் தேச விரோத கும்பலின் ஏஜென்ட் என்று நினைக்கிறேன். மத்திய அரசு இந்த மாதிரி ஜட்ஜ்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.


Nandakumar Naidu.
செப் 21, 2024 00:02

அந்த ஜட்ஜ் தேச விரோத கும்பலின் ஏஜென்ட் என்று நினைக்கிறேன். வர,வர கோர்ட்டுகள் தேச,மற்றும் சமூக விரோதிகளாக மாறிக்கொண்டு வருகின்றன. மத்திய அரசு இந்த மாதிரி ஜட்ஜ்களை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.


venugopal s
செப் 20, 2024 22:35

மத்திய பாஜக அரசுக்கு அவ்வப்போது நீதிமன்றத்திடம் இருந்து குட்டு வாங்கவில்லை என்றால் தூக்கமே வராது!


வைகுண்டேஸ்வரன்
செப் 20, 2024 22:30

ஒன்றிய அரசைக் கண்டித்து, நீதிமன்றம் ஓங்கி குட்டியிருக்கிறது.


Oru Indiyan
செப் 20, 2024 22:10

நீதி துறையே தமிழ்நாட்டில் மட்டும் எப்படி அந்த குழு அரசால் நடத்தப்படுகிறது. எத்தனை பேரை நடு இரவில் கைது செய்கிற இந்த அரசை கண்டிக்க துப்பில்லை.


ஆரூர் ரங்
செப் 20, 2024 21:22

பொய் சொல்லாமல் பெரிய வக்கீலாக முடியுமா? சின்ன வக்கீலா நீதிபதியாக ஆக முடியும்?


GMM
செப் 20, 2024 20:03

மத்திய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தை மாநில உயர் நீதி மன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை. இது போல் எல்லா மாநில உயர் நீதிமன்றமும் விசாரித்து மாறுபட்ட தீர்ப்பு கூறினால், குழப்பம் ஏற்படும். பொது நல வழக்கு மும்பை உயர் நீதிமன்ற அதிகார எல்லையில் உள்ள பிரச்சனை மட்டும் விசாரிக்க முடியும். அரசியல் சாசன பிரிவை அரசியல் சாசன பெஞ்சு தான் விசாரிக்க முடியும். வக்கீல் , போலீஸார் , தீவிர வாதிகள் போல் சர்வ சாதாரணமாக எல்லை தாண்ட முடியாது. மேலும் இவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லை. வக்கீல் , போலீஸார் , ஊழல் அரசியல் வாதிகள் நிர்வாக விதிகளை மீற மத்திய அரசு அனுமதிக்க கூடாது. அதுவரை ஊழல் தீவிர, பிரிவினை வாதம் ஒழியாது.


Ramesh
செப் 20, 2024 19:38

தமிழகத்து மட்டும் இதிலிருந்து விதி விலக்காக யுவர் ஆணர்


jayvee
செப் 20, 2024 19:30

நீதிபதிகளை பற்றி என்னவேண்டுமானாலும் பொய் செய்திகள் போட்டாலும் நீதிபதிகள் பொங்கக்கூடாது .. சவுக்கு சங்கரை தண்டித்ததும் செல்லாது என்று இந்த மும்பை நீதிமன்றம் சொல்லுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை