உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி புத்தக விவகாரம்; யாரையும் சும்மா விடப்போவதில்லை: அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

போலி புத்தக விவகாரம்; யாரையும் சும்மா விடப்போவதில்லை: அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

டில்லியில் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புத்தகம் கூட கொள்முதல் செய்யப்படவில்லை; நூலக புத்தகக் கொள்முதலில் ஊழல் நடந்தது திமுக ஆட்சியில்தான்; ஈவெரா நூலகம் மட்டுமல்லாது பல நூலகங்களில் முறைகேடு நடந்துள்ளது. போலி புத்தக கொள்முதல் விவகாரத்தில் யாரையும் சும்மா விடமாட்டோம். கன்னிமாரா நூலகத்தில் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை நானே பறிமுதல் செய்தேன்; இது போன்ற ஊழல் எந்த மாநிலத்திலும் இனி நடைபெறக்கூடாது என்பதற்காக பறிமுதல் செய்யப்பட்ட குப்பை புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7umfsjdb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நூலகங்களில் ஆங்கில நூல்களை இன்னும் ஆய்வு செய்யவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கூட நூலக கட்டுமானங்களில் தான் ஊழல் நடந்து இருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக புத்தக கொள்முதலில் ஊழல். அரசியல் தலையீடு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. புத்தகங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவோம். தற்பொழுது உள்ள விஷ கிருமிகளை அகற்றிவிட்டு புதிய முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்வோம். நாங்கள் கொள்முதல் செய்தால் இப்படியான குப்பை புத்தகங்களை கொள்முதல் செய்யவே மாட்டோம்.நூலகங்களுக்கு போலி நூல் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து கவிஞரான திமுக எம்பி கனிமொழி பேசாதது ஏன்? நீதிமன்றம் தலையிட்டதால் தான் திமுக ஆட்சியில் புத்தக கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டது. விஜய் பெயர் போட்ட பல புத்தகங்கள் திமுக ஆட்சியாளர்கள் தான் கொள்முதல் செய்துள்ளனர்.கைப்பற்றப்பட்ட போலி புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளோம். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!டில்லியில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புமுழு பேட்டியை பார்க்க இங்கே ஒரு கிளிக்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Vasan
நவ 17, 2026 17:14

அகல் விலக்கு மோகனை மட்டும் சும்மா விட்டு விடுங்கள், அவரிடம் ஒன்றுமில்லை, அவர் ஒரு ஏழை. வேறு யாரையும் சும்மா விடாதீர்கள்.


jss
நவ 18, 2026 09:01

ஏழை குற்றம. செய்தால் சும்மவிடலாமா? சட்டம் எல்லோருக்கும் பொதுதானே். ஆனால் அப்பாவும் அவர்கூட்டாளிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகிறார்களே. முதலில் அப்பாவையும் கூட்ஈளுகளையும் உள்ளே தள்ள வேண்டும் பிறகு அகல் விளக்கை தள்ள வேண்டும்.


KRISHNAN R
நவ 17, 2026 14:11

அது சரி,, ஐ ஏ எஸ் அதிகாரி விஷயம் என்ன என்று யாரும் சொல்லவே இல்லை


Palanisamy Sekar
நவ 17, 2026 13:56

யாரையும் சும்மா விடமாட்டோம்ன்னு சொல்றீங்களே தவிர எந்த ஆக்ஷனுமே இல்லையே. ஒருவேளை இந்த ஐந்தாண்டு கடந்த பிறகும் இதே டயலாக் பேசி திமுக பாணியை பின்பற்றுவீர்கள் போல. என் மேஜையின் மீது மூன்று பைல்கள் திமுக ஊழல் பட்டியல் இருக்கிறது என்று சொல்லி ஆறு மாதம் போயிடுச்சு. ஏ வ வேலுன்னீங்க.. நேருண்ணு சொன்னீங்க.. எதுவுமே நடக்காம ஏன் காத்திருக்கீங்க. விட்டகுறை தொட்டகுறையா இருக்குமோ . மடமடன்னு ஆக்ஷன் எடுத்தாதான் மக்களுக்கு திமுக மீது மீண்டும் கடுப்பு ஏறும்.. அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக முடங்கிவிடும்.. செய்வீர்களா செய்வீர்களா


prakash
நவ 17, 2026 13:38

தவெக தலைமை அனைவரையும் விசாரிக்க வேண்டும், யாரையும் சும்மா விடக்கூடாது


BHARATH
நவ 17, 2026 15:40

கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஈன பயலுக்கு எதுக்குப்பா இவ்ளோ முட்டு கொடுக்கிறே???


BHARATH
நவ 17, 2026 13:19

இந்த ஆள் ஒரு அகற்ற படவேண்டிய குப்பை


R Vijayaraghavan
நவ 17, 2026 13:16

ஒரு மண்ணும் நடக்காது இப்படியே கூவிகிட்டு ஊட்டுக்கு போய் சேர வேண்டியதுதான். ஈவெரா நூலகம் 50 கோடி கோவிந்தா கோவிந்தா தான் ஒண்ணும் பண்ண முடியாது உங்களால். திமுகவுக்கு இதெல்லாம் சும்மா டீ செலவுக்கான காசு


chinnamanibalan
நவ 17, 2026 13:13

1967 ல், காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை, திமுக கைப்பற்றிய போது, அப்போது தோற்றுப் போன காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் கூறியது, "தமிழ் நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன. இனி தமிழ் நாட்டை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்" என்பதாகும். இந்த சொல், இன்னும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. பக்தவச்சலம் அவர்கள் அன்று கூறியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் அதுவே நூற்றுக்கு நூறு உண்மை என்பது தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ் நாட்டை ஆண்டவனாலும் கூட, காப்பாற்ற இயலாது என்பதே உண்மை.


Rajan
நவ 17, 2026 13:02

பாஸ் அந்த மதுரை எம்பி புத்தகம் எழுதி கார் வாங்கினாராம் ,அவனது தொடர்பு கண்டிப்பா இருக்கும் நீங்க விசாரிக்க போவது இல்லை


duruvasar
நவ 17, 2026 12:55

பஞ்சு டயலாக்கை பேசுவதை விட்டுவிட்டு செயலில் காட்டுங்கள். பழனி, மதுரை, கோவில் நிலங்கள அபகரிப்பு வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை. அன்றே சிறு தவறு என சொல்லி ஒன்றும் நடக்காததுபோல் கடந்து போய்விட்டர்கள் . முதலில் இந்த வாய் ஜாலத்தை விட்டுவிட்டு நடவடிக்கை எடுங்கள். நேரு வேலு, சேகர் பாபு கேஸ் விழயங்கள் என்னவாயிற்று. அமைச்சரே .


ராமகிருஷ்ணன் பரமக்குடி
நவ 17, 2026 12:47

இந்த மாதிரியான டூபாகூர் புத்தக ஊழல்களுக்கு திமுக தான் காரணம் என்று அனைவரும் அறிந்ததே. யார் யார் இதில் சம்மந்தப்பட்டவர்கள் என்று இதுவரை விபரம் தெரியவில்லை, நீங்கள் பிடித்து விடுவேன் என்று பிலிம் காட்டுகிறீர்கள். ஒன்றும் நடக்கவில்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை