வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்பொழுதுள்ள அமெரிக்க அதிபருக்கு இந்தியாவை கண்டாலே பிடிக்காது. அதில் இதுபோன்ற செயல்கள் அவர் மேலும் நம்மை வெறுக்க வழிவகுக்கும்.
புனே: அமெரிக்கர்களிடம் தினமும் ரூ.25 லட்சம் மோசடி செய்து புனேயில் சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி கால் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் புனே, காரடி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மேக்னடெல் பி.பி.எஸ் அண்டு கன்சல்டன்ட்ஸ் எல்.எல்.பி, என்ற போலி கால் சென்டர் மையம் இயங்கி வருவதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் புனே குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு முதல் சோதனை நடத்தினர். இதில் கால் சென்டர் மையம் மூலம் அமெரிக்காவில் வசிப்பவர்களிடம் தினமும் ரூ.25 லட்சம் ஏமாற்றி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த போலி கால் சென்டர் மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.புனே காவல்துறையின் இணை ஆணையர் ரஞ்சன் குமார் சர்மா கூறியதாவது:இந்த கால் சென்டரில் 120 க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.மோசடிகள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களை குறிவைத்து, அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சர்ஜீத்சிங் கிராவத் சிங் ஷெகாவத் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த அபிஷேக் அஜய்குமார் பாண்டே, ஸ்ரீமே பரேஷ் ஷா, லக்ஷ்மன் அமர்சிங் ஷெகாவத் மற்றும் ஆரோன் அருமன் கிறிஸ்டியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 64 லேப்டாப்கள் மற்றும் 41 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு ரஞ்சன் குமார் சர்மா கூறினார்.
இப்பொழுதுள்ள அமெரிக்க அதிபருக்கு இந்தியாவை கண்டாலே பிடிக்காது. அதில் இதுபோன்ற செயல்கள் அவர் மேலும் நம்மை வெறுக்க வழிவகுக்கும்.