உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜப்பானியர்களை குறிவைத்து போலி கால்சென்டர்: 6 பேர் கைது

ஜப்பானியர்களை குறிவைத்து போலி கால்சென்டர்: 6 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தொழில்நுட்ப உதவி மையம் என்ற பெயரில் போலியான, 'கால்சென்டர்' நடத்தி, ஜப்பானியர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கும்பலை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.கிழக்காசிய நாடான ஜப்பான் மக்களை ஏமாற்றி இணையத்தில் பணம் பறிக்கும் கும்பல் இந்தியாவில் இருந்து செயல்படுவதாக ஜப்பான் போலீஸ் சி.பி.ஐ.,க்கு தகவல் அளித்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் டில்லியில் இரண்டு போலி கால்சென்டர்கள் முடக்கப்பட்டன.மோசடி கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டில்லி, உ.பி., ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது. இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், ஜப்பானைச் சேர்ந்த நபர்களின் கம்ப்யூட்டர் திரைகளில், வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாக எச்சரிக்கை தகவலை தோன்றச் செய்துள்ளனர். அதை பார்த்து பயந்து திரையில் தோன்றும் எண்ணுக்கு ஜப்பானியர்கள் அழைத்துள்ளனர்; அந்த அழைப்பு, இங்கு உள்ள போலி கால்சென்டருக்கு வந்துள்ளது.அவர்களிடம் பேசி கணினியின் 'ரிமோட் அக்சஸ்' எனப்படும் எங்கிருந்தபடியும் கணினியை இயக்கும் அனுமதியை பெறும் இந்த கும்பல், அதன் வாயிலாக, அவர்களது நெட் பேங்கிங் விபரங்களை திருடி பணத்தை சுருட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
மே 30, 2025 10:57

மொள்ளமாறித்தனம் செய்பவர்கள் எல்லோரும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!


அப்பாவி
மே 30, 2025 08:26

இண்டர்நேஷனல்.கிரிமினல்களாயிட்டு வர்ரோம். இதுக்காக உலகமொழிகளை கத்துக்கோங்க. வடக்கன்ஸ் ரொம்பவே முன்னேறிட்டாங்க.


Kasimani Baskaran
மே 30, 2025 03:52

திருந்த வாய்ப்பில்லாத இதுகளை நேரடியாக சுட்டுக்கொல்லலாம்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
மே 30, 2025 15:44

அமெரிக்க, கனடா நாட்டு மக்களை ஏமாற்றி முடிந்த அளவு பணம் ஆட்டை போட்டாசி, இப்ப டார்கெட் ஜப்பான் நாடு. இவ்ளோ பெரிய நெட்வொர்க், அரசாங்கத்திற்கு தெரியாமலா நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை