உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணிடம் பணமோசடி போலி சாமியார்கள் கைது

பெண்ணிடம் பணமோசடி போலி சாமியார்கள் கைது

புதுடில்லி:பெண்களை ஏமாற்றி, 37,000 ரூபாய் மோசடி செய்த இரு போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். வியாபாரம், வேலை, உடல் நலம் மற்றும் உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்ப்பதாக சமூக வலைதளம் ஒன்றில் வெளியாகி இருந்த விளம்-பரத்தைப் பார்த்த புதுடில்லி படேல் நகரில் வசிக்கும் ஒரு பெண், அதில் குறிப்பிட்டு இருந்த போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். தங்களை கடவுளின் துாதர்கள் எனக்கூறிக் கொண்ட முஹமது நசீர், 41, முஹமது ராஜா கான்,30, ஆகிய இருவரும், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்ப்பதாகக் கூறி பல தவணைகளில், 37,000 ரூபாய் வசூலித்தனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு பிரச்னை எதுவும் தீரவில்லை. மாறாக, பணத்தை இழந்ததால் பிரச்னை அதிகரித்தது. ஒரு கட்டத்தில், பணம் அனுப்ப முடியாது என அந்தப் பெண் கூறிய போது, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, இருவரும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, அந்தப் பெண் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், முஹமது நசீர் மற்றும் முஹமது ராஜா கான் ஆகிய இருவரையும் கைது செய்து, எத்தனை பேரை இதுபோல ஏமாற்றினர் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை