உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடிச்சு விட்டீங்க போங்க... கெஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் பகீர் குற்றச்சாட்டு

முடிச்சு விட்டீங்க போங்க... கெஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் பகீர் குற்றச்சாட்டு

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றம்சாட்டியுள்ளார். டில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம்ஆத்மி கட்சி, அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. இந்தத் தோல்விக்கு கெஜ்ரிவாலின் ஊழல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஆம்ஆத்மியின் முன்னாள் நிர்வாகிகள், கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=za4hkuui&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி அடைந்த தோல்வி பற்றி, அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் வெளிப்படையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு. மாற்று அரசியலுக்காக உருவாக்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி வெளிப்படைத்தன்மையுடனும், ஜனநாயக முறையுடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் வெளிப்படைத்தன்மையற்ற, ஊழல் நிறைந்த கட்சியாக அதனை மாற்றி விட்டார். ஊழல் எதிர்ப்பு ஆணையமான லோக்பால் சட்டத்தை அவர் மதிக்கவில்லை. மாறாக, லோக்பாலை அவர் நீக்கினார். அதுமட்டுமில்லாமல், கெஜ்ரிவால் தனக்காக ரூ.45 கோடியில் மஹால் ஒன்றை கட்டினார். விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களில் செல்லத் தொடங்கினார். ஆம்ஆத்மி நிபுணர் குழு தயாரித்த 33 கொள்கை அறிக்கைகளை நிராகரித்தார். மேலும், பகட்டு பிரசாரம் மற்றும் பேச்சுக்களால் அரசியல் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுள்ளார். இதுவே ஆம்ஆத்மியின் முடிவுக்கு ஆரம்பமாகி விட்டது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளர். இந்தப் பதிவில், ஆம்ஆத்மியில் இருந்து விலகும் போது, கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார். முன்னாள் நிர்வாகியின் இந்தப் பதிவு, ஆம்ஆத்மியினரிடையே மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
பிப் 10, 2025 09:56

ரெண்டு பேராசை பூனைங்க அப்பத்துக்கு அடிச்சுக்கப் போய் ஒரு குரங்கு நடுவில் பூந்து தூக்கிணு போயிரிச்சு. திருட்டுப் பூனைகள்.


Kasimani Baskaran
பிப் 10, 2025 07:11

நாடு முழுவதும் கம்மிகள் பல ரூபங்களில் வேடமிட்டு முதிர்ந்த ஜனாநாயகவாதிகள் போல காட்டிக்கொண்டது டெல்லியில் ஆரம்பித்து பஞ்சாப் வரை நீண்டது. இப்பொழுதாவது டெல்லி மக்கள் இதை புரிந்து கொண்டு இருக்கிறார்களே என்பது மகிழ்ச்சி. இவர்களின் கொட்டத்தை பஞ்சாப்பிலும் அடக்கினால் போதைப்பொருள் கடத்தல் வீழும், அத்தோடு திராவிடமும் வீழும்.


Venkatesan Srinivasan
பிப் 10, 2025 01:22

மக்கள் மன்றம் பழைய தமிழ் சினிமா வசனம். இப்பொழுது எல்லாம் மாக்கள் மன்றம். மொத்த வாக்குகளை பிரித்து குறைந்த அளவு பெற்றாலே வெற்றி பெற்று விடலாம் எதிர் அணியினர் வாக்குகளை பிரித்தால் போதும்.


ஆரூர் ரங்
பிப் 09, 2025 20:36

பிள்ளைகள் மீது சத்தியமாக அரசியலுக்கு வரமாட்டேன் போன்ற ஏகப்பட்ட சத்தியங்கள் செய்தார். எளிய நடையுடை பாவனையில் வேடமிட்டு உலாவந்தார். காங்கிரசையும் ஊழலையும் ஒழிக்க கட்சி துவங்கினார். அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். இறுதியில் கோடி ரூபாய் காரில் பயணம் 100 கோடி கண்ணாடி மாளிகையில் வாசம் என்று சாயம் வெளுத்தது.


Admission Incharge Sir
பிப் 09, 2025 21:44

அதுதான் சொல்லிவிட்டிர்களே, காங்கிரசுடன் கூட்டணிவைத்தார் என்று.


SP
பிப் 09, 2025 20:13

இவரது ஊழலை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இவரதுவெளிநாட்டு தொடர்புகளை உடனடியாக விசாரணை நடத்தி மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.


Srinivasan Krishnamoorthy
பிப் 09, 2025 20:38

court will free him, thats why Modi govt struggling to prosecute corrupt, Trump has to break the back of deep state and their influence over global judiciary, please remember judges ate appointed by collegium system only between networked and related people


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
பிப் 09, 2025 20:04

பாஸ் இஸ்லாமியர் ஓட்டு 1000-2500 வரை கனிசமா அங்க போச்சாம், அது தான் பிஜேபிக்கு வெற்றி காரணமாம்


Karthik
பிப் 09, 2025 19:48

பட்ட காலிலே படுமாம்..


Sivagiri
பிப் 09, 2025 18:42

அதே திருட்டு மாடலைதான் இங்கே திராவிட மாடல் என்று பாலோ பண்றங்க , ஆனா , பூஷன் மாதிரி எதிர் கேள்வி கேக்குற ஆட்களை எல்லாம் பக்கத்தில் சேத்துக்குறதில்லை . . . நல்ல அடிமைகளா பாத்துதான் பக்கத்தில் சேத்துக்குவாங்க . . . என்ன சொன்னாலும் செஞ்சாலும் தலை ஆட்டீட்டு சொல்ற இடத்தில கையெழுத்து போடனும் . யாரையும் மேலே எழுந்து நிற்க விட மாட்டாங்க , அதனால்தான் இத்தனை வருஷமா , கட்சியும் இருக்கு , தலைவனும் தலைவனா இருக்காரு


SUBBU,MADURAI
பிப் 09, 2025 20:09

இந்த பூஷன் என்றாலே திருட்டு... என்று அர்த்தம்.


Nagarajan D
பிப் 09, 2025 18:22

திருடனுக்கு பங்கு சரியாக வராததால் இந்த திருடன் அந்த திருடனை குறை சொல்கிறான்...


N.Purushothaman
பிப் 09, 2025 17:57

புஸ்ஸாகினார் பூஷன் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை