உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயி, 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து மரணம்

விவசாயி, 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து மரணம்

மைசூரு: எச்.டி.,கோட்டேயில் மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார். இரு கால்நடைகளும் பலியாகின.மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயை சேர்ந்தவர் சேகர், 45. விவசாயியான இவர், நேற்று முன்தினம் மாலை, தனது பண்ணையில், நான்கு மாடுகளை மேய்க்கச் சென்றார்.வீடு திரும்பும்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், சேகர் உயிரிழந்தார். இரண்டு பசுக்களும் இறந்தன. மாடுகளை மேய்க்கச் சென்ற சகோதரர் வரவில்லை என்று மூத்த சகோதரர் மகேஷ் பண்ணைக்கு சென்றபோது, அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.மின்சார அலுவலகத்துக்கு போன் செய்து எடுக்காததால், அந்தர்சந்தே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், மின் இணைப்பை துண்டித்து, பிரேத பரிசோதனைக்காக சேகரின் உடலை அனுப்பி வைத்தனர். அலட்சியமாக இருந்த மின் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை