உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் இந்தியா - வங்கதேச விவசாயிகள் மோதல்

எல்லையில் இந்தியா - வங்கதேச விவசாயிகள் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: எல்லையில், இந்தியா - வங்கதேச விவசாயிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.இந்தியா வங்கதேச எல்லையில், மேற்கு வங்க மாநிலத்தின் சுக்தேவ் எல்லை சோதனைச்சாவடி பகுதியில் வேலி அமைக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என கடந்த 6ம் தேதி வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதால் பணி நிறுத்தப்பட்டது. பிறகு இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு ஏற்பட்டது. மறுநாள் முதல் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், இந்த பகுதியில் சர்வதேச எல்லையில், இரு நாட்டு விவசாயிகளும் பணி புரிந்து கொண்டு இருந்தனர். அப்போது வங்கதேச விவசாயிகள் திருட்டில் ஈடுபடுவதாக இந்திய விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.இது தொடர்பாக பி.எஸ்.எப்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தலையிட்டதைத் தொடர்ந்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு நாட்டு விவசாயிகளும், அவர்களது பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற மோதலில் ஈடுபடக்கூடாது என இந்திய விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.எந்த பிரச்னையாக இருந்தாலும் எங்களிடம் கூற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 19, 2025 10:06

\ அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என கடந்த 6ம் தேதி வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் கூறியதால் பணி நிறுத்தப்பட்டது // இதுவே நமக்குப்பின்னடைவு ...... இதுவே நமக்கு அவமானம் ......


Ram Moorthy
ஜன 19, 2025 09:52

பக்கிஸ்தான், ப.தேஷ் மற்றும் சைனா மூன்றும் வேறு வேறு நாடுகள் தான் ஆனால் ஒரே திருட்டு கும்பல்கள் தான் எண்ணம் பரம்பரையின் திருட்டு குணம் இந்திய இன்னும் நிறைய கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.


நிக்கோல்தாம்சன்
ஜன 19, 2025 07:29

எப்போ விவசாயிகள் மீது கைவைத்தார்களோ அப்போதே அவர்களுக்கு இந்திய பகுதிகளில் வாழும் தகுதி இருக்கக்கூடாது , தமிழக முஸ்லிம்களே தயவு செய்து பங்களாதேஸ் பன்றிகளை ஆதரிக்காதீங்க


J.V. Iyer
ஜன 19, 2025 04:29

மாமிசத்திற்காக பங்களாதேஷிகள் ஹிந்துஸ்தானில் உள்ள ஆடு, மாடுகளை திருடுவது வாடிக்கை. இதுதான் எல்லையில் வேலி அமைப்பதற்கு இந்த கேடுகெட்ட பங்களாதேஷிகள் போராடுகிறார்கள்.


Kumar Kumzi
ஜன 19, 2025 00:37

அத்து மீறும் மூர்க்க காட்டுமிராண்டிகளை சுட்டுக்கொல்லுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை