உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகளுக்கு கொழுப்பு காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்

அதிகாரிகளுக்கு கொழுப்பு காங்., - எம்.எல்.ஏ., ஆவேசம்

கலபுரகி: ''மாவட்ட அதிகாரிகளுக்கு கொழுப்பு அதிகரித்துள்ளது. என் பேச்சை யாரும் கேட்பது இல்லை,'' என, ஆளந்தா காங்., - எம்.எல்.ஏ.,வும், முதல்வரின் ஆலோசகருமான பி.ஆர்.பாட்டீல் அதிருப்தி தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாவட்டத்தின் எந்த அதிகாரிகளும், எங்கள் பேச்சை கேட்பது இல்லை. மக்களின் பிரச்னைகளிலும் அக்கறை காட்டுவது இல்லை. அடிப்படை வசதிகள் இன்றி, மக்கள் பரிதவிக்கின்றனர். சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் உட்பட எந்த அதிகாரிகளும் மக்களின் பிரச்னைகளை பொருட்படுத்தவில்லை. அதிகாரிகளுக்கு கொழுப்பு அதிகரித்துள்ளது.அதிகாரிகளின் செயலால், அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. இதுகுறித்து சிறு பிள்ளைகள் போன்று, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம், நாங்கள் புகார் அளிக்க வேண்டியுள்ளது. இது சரியா?சில பணிகள் தரமாக நடப்பதில்லை; ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்காதீர்கள் என, நாங்கள் கூறினால், அதிகாரிகள் கேட்பதில்லை. பில் தொகை அளிக்கின்றனர். கலபுரகி மாநகராட்சி துணை கமிஷனர் ஜாதவை துாக்கி எறிய வேண்டும். இவர் அனைத்து அரசுகள் காலத்திலும் இருக்கிறார். ஒரே இடத்தில் 20 ஆண்டுகளாக அமர்ந்திருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை