மேலும் செய்திகள்
மின்பொறியியல் சிக்கி தந்தை, மகன் பலி
15-Nov-2024
பெலகாவி: மீன் பிடிக்க சென்ற தந்தையும், இரண்டு மகன்களும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.பெலகாவி, யம்கன்மரடியின், பெடகனஹோளே கிராமத்தில் வசித்தவர் லட்சுமண் ராம அம்பலி, 45. இவருக்கு ரமேஷ், 15, எல்லப்பா, 13, என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். லட்சுமண் ராம அம்பலி அவ்வப்போது, மகன்களுடன் தங்கள் கிராமத்தின் அருகில் உள்ள, கட்டபிரபா ஆற்றுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் மாலையில் தந்தையும், மகன்களும் பைக்கில் கட்டபிரபா ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆற்றின் பாலத்தில் பைக்கை நிறுத்திவிட்டு, சிறிய பரிசலில் சென்று மீன் பிடிக்க வலை விரித்தபோது, பரிசல் கவிழ்ந்து எதிர்பாராமல் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.நேற்று முன்தினம் மாலை சென்றவர்கள், நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. பீதியடைந்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தேடியபோது, ஆற்றின் பாலத்தில் பைக் நின்றிருப்பது தெரிந்தது. அதன்பின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உதவியுடன், ஆற்றில் தேடி மூவரின் சடலங்களையும் மீட்டனர்.யம்கன்மரடி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Nov-2024