உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணமகன் டான்ஸ் ஆடியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மாமனார்

மணமகன் டான்ஸ் ஆடியதால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மாமனார்

புதுடில்லி : டில்லியில் வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபல ஹிந்தி பாடலுக்கு மணமகன் நடனமாடியதால், கோபமடைந்த பெண்ணின் தந்தை திருமணத்தை பாதியில் நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரவேற்பு நிகழ்ச்சி

டில்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்ணின் வீட்டில் நடந்த திருமணத்தை காண, மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் குவிந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=26wzkk6h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நடந்த மணமகன் ஊர்வலத்தில், பேண்டு வாத்தியங்கள் முழங்க மணமகன் மற்றும் அவரது வீட்டார் பங்கேற்றனர். ஆடல் - பாடலுடன் உற்சாகமாக வந்த ஊர்வலம், மணப்பெண்ணின் வீட்டை அடைந்தது. மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஒருவரையொருவர் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். உறவினர்களை குஷிபடுத்தும் வகையில் ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 'சோலி கீ பீச்சே க்யா ஹை...' என்ற பிரபல ஹிந்தி பாடல் ஒலிபரப்பப்பட்டது.அதைக் கேட்ட மணமகனின் நண்பர்கள் உற்சாக நடனத்தில் ஈடுபட்டனர். மணமகனையும் ஆடச் சொல்லி அவர்கள் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த பாடலுக்கு மணமகன் மகிழ்ச்சி பொங்க நடனமாடினார்.

சர்ச்சை

இதனால், திடீரென ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, பாரம்பரியமிக்க தங்கள் குடும்பத்தினர் முன்பு மணமகன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி, நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்து வெளியேறினார். அது மட்டுமின்றி உடனடியாக திருமணத்தை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதனால், மணப்பெண் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.பொழுதுபோக்குக்காகவும், விளையாட்டாகவும் நடனமாடியதாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துக் கூறியும், பெண்ணின் தந்தை அதை காதில் வாங்கவில்லை. திருமணத்தை நிறுத்தியதுடன், மாப்பிள்ளை வீட்டாருடன் யாரும் இனி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என தன் குடும்பத்தாருக்கு உத்தரவிட்டார்.இதனால், மகிழ்ச்சி ததும்ப துவங்கிய திருமண கொண்டாட்டம் களையிழந்தது. மணமக்கள் இருவரும் கண்ணீர் மல்க பிரிந்தது காண்போரை கலங்க செய்தது. கடந்த 1993ல் வெளிவந்த கல்நாயக் படத்தில் இடம்பெற்ற 'சோலி கீ பீச்சே க்யா ஹை...' பாடல், சமீபத்தில் வெளியான க்ரூ படத்திலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. பாடல் முதன்முதலில் வெளிவந்தபோதே, அதில் ஆபாச கருத்துகள் இருப்பதாக சர்ச்சையும், எதிர்ப்பும் எழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Venkatesan
பிப் 03, 2025 12:07

"சோலி கீ பீச்சே க்யா ஹை..." - சோலி முடிஞ்சுச்சு ஹேன்...


ஆரூர் ரங்
பிப் 03, 2025 11:28

மனைவியின் தாளத்திற்கு மட்டுமே ஆடவேண்டும் என எதிர்பார்த்திக்கிறார். வேறு பாடல் என்பதால் வேதாளமாகி விட்டாரா? சோலி கே பாடலால் சோலி முடிஞ்சு போச்சு.


jayvee
பிப் 03, 2025 10:54

இதுக்குதான் கலியாணம் நடந்தபிறகு நன்றி தெரிவிக்கும் விழாவாக வரவேற்பு நிகழ்ச்சியை மாற்றவேண்டும்


Anand
பிப் 03, 2025 10:54

அவர் திருமணத்தை நிறுத்தியது சரியே.....


SURESH M
பிப் 03, 2025 10:51

அதான் கலாச்சாரத்தை சீரழிக்க பெட் கார்ல் என்று சினிமா படம் எடுக்குறானுக...அதையும் சில கூத்தாடிகள் வரவேற்க ...அவனுகள பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கு என்னத்த சொல்ல


Pudhuvai Paiyan
பிப் 03, 2025 08:52

மணமகன் கடைசியாக ஒருமுறை மகிழ்ச்சியாக இருக்க நினைத்தாரோ என்னவோ அதற்கும் ஆப்பு வைத்தாச்சு


Svs Yaadum oore
பிப் 03, 2025 09:52

கல்யாணம் என்றால் அது மட்டும்தான் என்று நினைக்கும் கேவல திராவிட அறிவுக்கு இப்படித்தான் நினைக்க தோன்றும் ...


Svs Yaadum oore
பிப் 03, 2025 08:41

வடக்கனுக்கு மானம் ரோஷம் கொஞ்சமாவது பாக்கி உள்ளது ....அதனாலதான் கல்யாணத்தை நிறுத்திட்டாரு ....இங்குள்ள விடியல் திராவிடனுங்களுக்கு அதெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது ....


Shekar
பிப் 03, 2025 09:40

நம்ம ஊர்ல சில கல்யாணத்தில முத்தம் கொடுக்க சொல்லி போட்டோ எடுக்கிறானுக, இந்த ஆண்டு பொங்கல் மறுநாள் ஏதோ ஒரு கிராமத்தில் போட்டி, மனைவி வாயில் இருப்பதை கணவன் வாயில் எடுத்து இலக்கு நோக்கி ஓடி வரவேண்டும். தமிழ் கலாச்சாரம் எவ்வளவு முன்னேறியுள்ளது


V வைகுண்டேஸ்வரன்
பிப் 03, 2025 08:39

சூப்பர் மாமனார். இந்துக்களின் கலாச்சாரங்களை கேலிக்குரியவை ஆக்கிக் கொண்டிருப்பது நாமே தான். இப்படி 19 பேர் வலுவான எதிர்ப்பு காட்டினால் தான் இது போன்ற அவமரியாதையான செயல்களை நிறுத்துவார்கள். கேரளாவில் நம்மவர்கள் போட்டோ ஷூட் என்று செய்கிற அசிங்கங்கள் ஏராளம். நம்மை அவமதிக்க வேற மதத்தில் இருந்து யாரும் வர வேண்டாம். நம்ம ஆட்களே போதும்.


vijai chennai
பிப் 03, 2025 07:47

மணமகன் கூட அவரது தந்தை தாய் சேர்ந்து ஆடுகிறார்கள் கேவலமான பழக்கங்கள்


Nallavan
பிப் 03, 2025 07:40

மாற்றத்தை விரும்பாத மாமனார், காலம் மாறித்தான் ஆகும், நாமும் மாறவேண்டிய காலம் வரும்


Svs Yaadum oore
பிப் 03, 2025 08:39

எந்த நாட்டில் இது போல காலம் மாறியுள்ளது?? ...நீலப்படம் தோற்கும் அளவுக்கு இங்கு அசிங்கம். ..வெள்ளைக்காரன் நாட்டில் கூட திருமணம் என்றால் மிக நாகரீகமாக கவுரவமாக நடக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை