உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடூர தந்தைக்கு 178 ஆண்டு சிறை தண்டனை

கொடூர தந்தைக்கு 178 ஆண்டு சிறை தண்டனை

மலப்புரம்: கேரளாவில், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுபற்றிய விவரம் வருமாறு; 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அரிக்கோட்டில் உள்ள சிறுமி ஒருவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் நுழைந்த அவரது 46 வயது தந்தை, மகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி வெளியில் கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். அதன் பின்னர் சிறுமி பள்ளிக்குச் சென்ற போது நடந்ததை அறிந்த பள்ளி நிர்வாகம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தது.வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கானது, மஞ்சேரி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து விட குற்றவாளி தந்தைக்கு 178 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்ட இந்த தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் 40 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ